ஜல்சக்தி அமைச்சகம்
இமாச்சலப் பிரதேசத்தில் கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கம் –மத்திய அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் ஆய்வு செய்தார்
Posted On:
04 DEC 2024 11:53AM by PIB Chennai
இமாச்சலப் பிரதேசத்தில் கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கம்-ஊரகத்தின் (SBM-G) செயல்பாடுகள் குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய ஜல் சக்திதுறை அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல் தலைமை வகித்தார். திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத சிறப்பு மாதிரி நிலையான ஓடிஎப் பிளஸ் மாதிரி நிலையை அடைவது குறித்தும், கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஓடிஎஃப் பிளஸ் மாதிரி முன்னேற்றத்தில் 34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இமாச்சல பிரதேசம் 21-வது இடத்தில் உள்ளது. மாநிலத்தின் 17,596 கிராமங்களில், 15,832 கிராமங்கள் (90%) திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 11,102 (63%) கிராமங்கள் ஓடிஎப் பிளஸ் மாதிரி நிலையை எட்டியுள்ளன. மீதமுள்ள கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பிளஸ் நிலையை மார்ச் 2025-க்குள் அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திறன்வாய்ந்த கழிவு மேலாண்மை செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் இக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.
***
TS/PLM/AG/KV
(Release ID: 2080526)
Visitor Counter : 38