கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் மின்சார வாகன சூழல்சார் அமைப்பை மேம்படுத்துதல்

Posted On: 03 DEC 2024 5:22PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 ஆகியவற்றின் தொலைநோக்குப் பார்வையுடன்  கூடிய உள்ளூர் உற்பத்திக்கு ஆதரவளிப்பதன் மூலம் நாட்டின் மின்சார வாகன சூழல்சார் அமைப்பை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் கனரக தொழில்துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. மேலும் இந்த திட்டங்கள் உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் உட்பட நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகின்றன.

புதுமையான வாகன மேம்பாட்டில் பிரதமரின் மின்சார வாகன புரட்சித்   திட்டம், மின்சார வாகன இயக்கத்தை ஊக்குவிப்பதற்கும் நாட்டில் புதைபடிவ எரிபொருள்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் இத்திட்டம் 29.09.2024 அன்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 01.04.2024 முதல் 31.03.2026 வரையிலான  இரண்டாண்டுகளுக்கு ரூ.10,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 01.04.2024 முதல் 30.09.2024 வரையிலான 06 மாத காலத்திற்கு செயல்படுத்தப்பட்ட மின்சார வாகன இயக்க ஊக்குவிப்புத் திட்டம் 2024, பிரதமரின் மின்சாரவாகன இயக்கத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரிபாகங்கள் தொழிலுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் 15.09.2021 அன்று தொடங்கப்பட்டது,

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகுதுறை அமைச்சர் திரு.எச்.டி. குமாரசாமிஇத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080181

***

TS/IR/KPG/DL


(Release ID: 2080400) Visitor Counter : 52


Read this release in: English , Urdu , Hindi