எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கச்சா எஃகு உற்பத்தி மற்றும் இறக்குமதி

Posted On: 03 DEC 2024 5:07PM by PIB Chennai

2023-24 - ம் நிதியாண்டில் 144.3 மில்லியன் டன் கச்சா எஃகு உற்பத்தி செய்து இந்தியா உலகின் இரண்டாவது பெரிய கச்சா எஃகு உற்பத்தி  செய்யும் நாடாக உள்ளது. 2023-24 - ம் ஆண்டில் 7.49 மில்லியன் டன் ஏற்றுமதி மற்றும் 8.32 மில்லியன் டன் இறக்குமதியுடன் எஃகின் நிகர இறக்குமதியாளராக இந்தியா இருந்தது. நடப்பு நிதியாண்டில், அதாவது 2024-25 ம் ஆண்டில் ஏப்ரல்-அக்டோபர் மாதம் வரை  (தோராயமாக), எஃகு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி முறையே 5.77 மில்லியன் டன் மற்றும் 2.75 மில்லியன் டன்களாக இருந்தது.

கடந்த ஏழு நிதியாண்டுகளில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் சீனாவிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட எஃகு இறக்குமதி செய்யப்பட்ட விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

பருவம்   முடிக்கப்பட்ட எஃகு இறக்குமதி (மில்லியன் டன்களில்)

    

     சீனாவில் இருந்து    மொத்தம்

ஏப்ரல்-ஆகஸ்ட் 2018-19     064  333

         

ஏப்ரல்-ஆகஸ்ட் 2019-20     059  345

         

ஏப்ரல்-ஆகஸ்ட் 2020-21     039  167

         

ஏப்ரல்-ஆகஸ்ட் 2021-22     036  196

         

ஏப்ரல்-ஆகஸ்ட் 2022-23     047  206

         

ஏப்ரல்-ஆகஸ்ட் 2023-24     086  278

         

ஏப்ரல்-ஆகஸ்ட் 2024-25     1.13  3.72

 

ஆதாரம் நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC); (தோராயமாக)

எஃகு ஒரு முறைசாரா துறை. எஃகுத் துறையின் வளர்ச்சிக்கு உகந்த கொள்கைச் சூழலை உருவாக்குவதன் மூலம் அரசால் வாதிகளை ஏற்படுத்தித் தரும் அமைப்பாக செயல்படுகிறது. உள்நாட்டு உருக்குத் தொழிலைப் பாதுகாக்க அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது-

1.    2024-25 -ம் நிதியாண்டிற்கான யூனியன் பட்ஜெட்டில், எஃகு தொழிலுக்கான மூலப்பொருட்களான ஃபெரோ-நிக்கல் மற்றும் மாலிப்டினம் தாதுக்கள் மற்றும் செறிவுகள் மீதான அடிப்படை சுங்க வரி (BCD) 2.5% முதல் பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இரும்புக் கழிவுகள் மற்றும் சி.ஆர்.ஜி.ஓ எஃகு உற்பத்திக்கான குறிப்பிட்ட மூலப்பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரி விலக்கு 31.03.2026 வரை தொடரும்.

2.    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரும்பு மற்றும் எஃகு பொருட்களுக்கான (DMI&SP) கொள்கையை அமல்படுத்துதல், அரசின் கொள்முதலுக்காக 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' எஃகு.

3.    நாட்டிற்குள் 'சிறப்பு எஃகு' உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், மூலதன முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் இறக்குமதியைக் குறைப்பதற்கும் சிறப்பு எஃகுக்கான உற்பத்தியுடன் கூடிய  ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டத்தை தொடங்குதல். சிறப்பு எஃகுக்கான உற்பத்தியுடன் கூடிய  ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்படும் கூடுதல் முதலீடு 29,500 கோடி ரூபாயாகும். மேலும் சிறப்பு எஃகுக்கு சுமார் 25 மில்லியன் டன் (எம்டி) கூடுதல் திறன் உருவாக்கப்படும்.

4.    உள்நாட்டு எஃகு தொழிலின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இறக்குமதியை திறம்பட கண்காணிக்க எஃகு இறக்குமதி கண்காணிப்பு அமைப்பு (சிம்ஸ்) 2.0-ஐ மாற்றியமைத்தல்.

5.    உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு கழிவுகள் கிடைப்பதை அதிகரிக்க எஃகு கழிவுகள் மறுசுழற்சி கொள்கையை அறிவிக்கை.

6.    இரும்பு தரக்கட்டுப்பாடு ஆணை அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் தரம் குறைந்த  குறைபாடுள்ள எஃகு பொருட்கள் உள்நாட்டு சந்தையிலும், இறக்குமதியிலும் தடை செய்யப்பட்டு, தொழிற்சாலைகள், பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தரமான எஃகு கிடைப்பதை உறுதி செய்தல். இந்த உத்தரவின்படி, தொடர்புடைய இந்திய தர நிறுவனத்தின் தரத்திற்கு இணங்க தரமான எஃகுகள் மட்டுமே இறுதி பயனர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தது. இன்றைய நிலவரப்படி கார்பன் எஃகு, உலோகக் கலவை மற்றும் துருப்பிடிக்காத எஃகு ஆகியவற்றை உள்ளடக்கிய 151 இந்திய தர நிர்ணயங்கள் தரக்கட்டுப்பாடு ஆணையின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் திரு.எச்.டி. குமாரசாமிஇந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://pib.gov.inPressReleasePage.aspxPRID=2080160

***

SV/KPG/DL

 


(Release ID: 2080395) Visitor Counter : 34


Read this release in: English , Urdu , Hindi