மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
தேசிய கால்நடை பராமரிப்பு இயக்கத்தின் (RGM) அமலாக்கம்
Posted On:
03 DEC 2024 4:48PM by PIB Chennai
மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, உள்நாட்டு பசு மற்றும் எருமையினங்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு, மாட்டினகளின் எண்ணிக்கையின் மரபணு மேம்பாடு மற்றும் பால் உற்பத்தி மற்றும் மாடுகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்க தேசிய கால்நடை பராமரிப்பு இயக்கத்தை 2014 - ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாவன: (i) மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாடுகளின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் நிலையான முறையில் பால் உற்பத்தியைப் பெருக்குதல்; (ii) உயர் மரபணு தகுதி கொண்ட காளைகளை இனப்பெருக்க நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை பரப்புதல்; (iii) செயற்கைமுறை கருவூட்டல் பணிகளை விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று வழங்குவதன் மூலம் செயற்கைமுறை கருவூட்டல் பணிகளை அதிகரித்தல் (iv) உள்நாட்டு பசு மற்றும் எருமையின வளர்ப்பு மற்றும் பாதுகாப்பை அறிவியல் மற்றும் முழுமையான முறையில் ஊக்குவித்தல்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து பங்கேற்று வருகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்த மத்திய அரசு இதுவரை ரூ.95.78 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. மாநிலத்தின் உள்நாட்டினமான பஹாரி இன மாடுகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. தேசிய கால்நடை பராமரிப்பு இயக்கம் மற்றும் துறையால் மேற்கொள்ளப்பட்ட பிற நடவடிக்கைகளால், மாநிலத்தில் பால் உற்பத்தி 2014-15 - ம் ஆண்டில் 11.72 இலட்சம் டன்னிலிருந்து 2023-24 - ம் ஆண்டில் 17.48 இலட்சம் டன்னாக 49.20 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டின மற்றும் வகைப்படுத்தப்படாத கால்நடைகளின் உற்பத்தித்திறன் 2014-15 - ம் ஆண்டு மற்றும் 2023-24 - ம் ஆண்டுக்கு இடையில் 23.07% அதிகரித்துள்ளது, 2014-15 - ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 1.69 கிலோ/கால்நடை/நாளாக இருந்த கால்நடைகளின் உற்பத்தித்திறன் 2023-24 - ம் ஆண்டில் 2.08 கிலோ/கால்நடை/நாளாக அதிகரித்துள்ளது. அதேபோல், எருமைகளின் உற்பத்தித்திறன் 2014-15 - ம் ஆண்டில் நாளொன்றுக்கு 3.64 கிலோ/கால்நடை/நாளாக இருந்த எருமைகளின் உற்பத்தித்திறன் 2023-24 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 3.64 கிலோ/கால்நடை/நாளாக இருந்து 2023-24 - ம் ஆண்டில் 4.32 கிலோ / கால்நடை/நாளாக 18.68% அதிகரித்துள்ளது.
தேசிய கால்நடை பராமரிப்பு இயக்கம் பயனாளிகளை மையமாகக் கொண்ட திட்டம் அல்ல என்ற போதிலும், சிம்லா, சோலன் மற்றும் சிர்மோர் உள்ளிட்ட இமாச்சலப் பிரதேசத்தில் பால்பண்ணையில் ஈடுபட்டுள்ள கிராமப்புற விவசாயிகளுக்கு பின்வரும் உதவிகள் வழங்கப்படுகின்றன
(i) நாடு தழுவிய செயற்கைமுறை கருவூட்டல் திட்டத்தை செயல்படுத்துதல்: செயற்கைமுறை கருவூட்டல் சேவைகள் விவசாயிகளின் இருப்பிடங்களிலேயே இலவசமாக வழங்கப்படுகிறது. இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இதுவரை 16,92,066 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, 25,89,153 செயற்கைமுறை கருவூட்டல் செய்யப்பட்டுள்ளதுடன், 13,62,483 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். சிம்லா, சோலன், சிர்மோர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களும் இத்திட்டத்தின் கீழ் பங்கேற்கின்றன.
(ii) இனவகைப்படுத்தப்பட்ட விந்தணுக்களைப் பயன்படுத்தி விரைவுபடுத்தப்பட்ட இன மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துதல்: இத்திட்டத்தின் கீழ் இனவகைப்படுத்தப்பட்ட விந்தின் விலையில் 50 விழுக்காடு வரை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இமாச்சலப் பிரதேச அரசு 45,000 டோஸ் பாலின வகைப்படுத்தப்பட்ட விந்தினை கொள்முதல் செய்துள்ளது. இதில் 20,858 செயற்கைமுறை கருவூட்டல் செய்யப்பட்டு 15,287 விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் சிம்லா, சோலன், சிர்மோர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080132
----
SV/KPG/DL
(Release ID: 2080392)
Visitor Counter : 19