மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
தேசிய கால்நடை பராமரிப்பு இயக்கம்
Posted On:
03 DEC 2024 4:49PM by PIB Chennai
உள்நாட்டு பசு மற்றும் எருமை இனங்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக, மாட்டினங்களின் எண்ணிக்கையின் மரபணு மேம்பாடு மற்றும் பால் உற்பத்தி மற்றும் மாடுகளின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காகவும் தேசிய கால்நடை பராமரிப்பு இயக்கத்தை (ஆர்ஜிஎம்) மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, 2014 - ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் நோக்கங்களாவன (i) மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாடுகளின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் நிலையான முறையில் பால் உற்பத்தியைப் பெருக்குதல்; (ii) உயர் மரபணு தகுதி கொண்ட காளைகளை இனப்பெருக்க நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை பரப்புதல்; (iii) செயற்கைமுறை கருவூட்டல் பணிகளை விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று வழங்குவதன் மூலம் செயற்கைமுறை கருவூட்டல் பணிகளை அதிகரித்தல் (iv) உள்நாட்டு பசு மற்றும் எருமையின வளர்ப்பு மற்றும் பாதுகாப்பை அறிவியல் மற்றும் முழுமையான முறையில் ஊக்குவித்தல்.
குஜராத் மாநிலம் தேசிய கால்நடை பராமரிப்பு இயக்கத்தை தொடக்கத்திலிருந்தே செயல்படுத்தி வருகிறது. தேசிய கால்நடை பராமரிப்பு இயக்கம் மற்றும் இத்துறையால் மேற்கொள்ளப்பட்ட பிற நடவடிக்கைகளால், மாநிலத்தில் பால் உற்பத்தி 2014-15 - ஆண்டில் 116.91 இலட்சம் டன்னிலிருந்து 2023-24 - ம் ஆண்டில் 56.64 சதவீதம் அதிகரித்து 183.12 இலட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. நாட்டின மற்றும் வகைப்படுத்தப்படாத கால்நடைகளின் உற்பத்தித்திறன் 2014-15 மற்றும் 2023-24 -ம் ஆண்டுகளுக்கு இடையில் 19.57% அதிகரித்துள்ளது, இது 2014-15 - ம் ஆண்டில் 4.19 கிலோவிலங்குநாளிலிருந்து 2023-24 - ம் ஆண்டில் 5.01 கிலோவிலங்குநாளாக அதிகரித்துள்ளது. அதேபோல், எருமைகளின் உற்பத்தித்திறன் 2014-15 மற்றும் 2023-24 ஆண்டுகளுக்கு இடையில் 7.46% அதிகரித்துள்ளது.
குஜராத்தில் தேசிய கால்நடை பராமரிப்பு இயக்கத்தின் சாதனைகள் பின்வருமாறு
1. நாடு தழுவிய செயற்கை கருவூட்டல் திட்டம் இயக்கத்தின் கீழ், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, 50% க்கும் குறைவான செயற்கை கருவூட்டல் உள்ள மாவட்டங்களில் செயற்கை கருவூட்டல் திட்டத்தை விரிவுபடுத்தி, உள்நாட்டு இனங்கள் உட்பட மாடுகளின் பால் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் செயற்கைமுறை கருவூட்டல் சேவைகள் விவசாயிகளின் இருப்பிடங்களுக்கே சென்று இலவசமாக வழங்கப்படுகின்றன. குஜராத்தில் 37.59 இலட்சம் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்பட்டு, 53.00 இலட்சம் செயற்கைமுறை கருவூட்டல்கள் செய்யப்பட்டு, 24.34 இலட்சம் விவசாயிகளும், மேஹ்சானா மாவட்டத்தில் 1.07 இலட்சம் கால்நடைகளும் பயனடைந்து, 1.86 இலட்சம் செயற்கைமுறை கருவூட்டல்கள் செய்யப்பட்டு, 0.69 இலட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
1. வம்சாவழி சோதனை மற்றும் சந்ததி வழித்தொடர் தேர்வு இத்திட்டத்தின் நோக்கம், உள்நாட்டின காளைகள் உட்பட உயர் மரபியல் தகுதி கொண்ட காளைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கிர் இன மாட்டினம் மற்றும் எருமைகளின் மேஹ்சானா இனங்களுக்கு வம்சாவழி சோதனை செயல்படுத்தப்படுகிறது. சந்ததி வழித்தொடர் தேர்வு திட்டத்தின் கீழ் காங்க்ரேஜ் இன மாட்டினம், ஜாபராபாடி மற்றும் பண்ணி இன எருமைகள் ஆகியவை அடங்கும். இன்றைய நிலவரப்படி, 349 கிர், 27 காங்க்ரெஜ் மற்றும் 160 உயர் மரபுத் தன்மை கொண்ட மெஹ்சானா காளைகள் விந்தணு கால்நடைப் பராமரிப்பு நிலையங்களுக்கு கிடைக்கின்றன.
2. கிராமப்புற இந்தியாவில் பல்நோக்கு செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர்கள் (மைத்ரிகள்) இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று தரமான செயற்கை கருவூட்டல் சேவைகளை வழங்க மைத்ரி நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. குஜராத்தில், கடந்த 3 ஆண்டுகளில் தேசிய கால்நடை பராமரிப்பு இயக்கத்தின் கீழ் 527 மைத்ரி நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, அவர்களில் 4 மைத்ரி நிறுவனங்கள் மெஹ்சானா மாவட்டத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.
3. உறைவிந்து நிலையத்தை பலப்படுத்துதல் விந்து நிலையத்தை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் மொத்தம் 38 விந்து நிலையங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தில் தேசிய கால்நடை பராமரிப்பு இயக்கத்தின் கீழ் படான், தாவோல் மற்றும் ஜகுதான் ஆகிய 3 விந்து நிலையங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
1. பாலின விந்து உற்பத்தி இனப்பெருக்க வகைப்படுத்தப்பட்ட விந்து உற்பத்திக்கு 90% துல்லியத்துடன் பெண் கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது, இதனால் இன மேம்பாடு மற்றும் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கிறது. தேசிய கால்நடை பராமரிப்பு இயக்கத்தின் கீழ், படானில் உள்ள மாநில உறைவிந்து உற்பத்தி மற்றும் பயிற்சி நிலையத்தில் குஜராத் மாட்டின விந்து பாலின பயிற்சி நிறுவனம் நிறுவப்பட்டு, இதுவரை 5,11,714 பாலின வகைப்படுத்தப்பட்ட விந்து டோஸ்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மெஹ்சானா மாவட்டத்தில் மொத்தம் 3593 பாலின வகைப்படுத்தப்பட்ட விந்து டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, அவற்றில் இதுவரை 385 கன்றுகள் பிறந்துள்ளன, அவற்றில் 94.55% பெண் கன்றுகள்.
தேசிய கால்நடை பராமரிப்பு இயக்கத்தின் கீழ், உள்நாட்டு மாட்டினங்களை அறிவியல் மற்றும் முழுமையான முறையில் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கத்துடன், ஒருங்கிணைந்த உள்நாட்டு கால்நடை மேம்பாட்டு மையங்களாக கோகுல் கிராமங்களை அமைப்பதற்கு 100% மானியமாக நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021-2022 - ம் ஆண்டு முதல் 2025-2026 - ம் ஆண்டு வரையிலான தேசிய கால்நடை பராமரிப்பு இயக்கத்தின் திருத்தப்பட்ட மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, செயல்பட்டு வருகிறது. தரம்பூர் போர்பந்தரில் கோகுல் கிராமம் அமைக்க குஜராத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080135
----
SV/KPG/DL
(Release ID: 2080391)
Visitor Counter : 27