கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பேட்டரி மின்னேற்றி வசதிகளுக்கு உரிமம் வழங்குதல்

Posted On: 03 DEC 2024 5:21PM by PIB Chennai

மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றி உள்கட்டமைப்பு குறித்து 2018 ஏப்ரல் 13 அன்று மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்ட விளக்கத்தின்படி, மின்னேற்றி நிலையம் மூலம் மின்சார வாகனங்கள் பேட்டரி மின்னேற்றம் செய்வதற்கு மின்சார சட்டம் 2003-ன் கீழ் உரிமம் தேவையில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டது.

நிதி ஆயோக் 2022-ம் ஆண்டில் பொது ஆலோசனைக்காக வரைவு பேட்டரி மாற்றுக் கொள்கையை வெளியிட்டது.  பேட்டரி இடமாற்றம் என்பது ஒரு மாற்றாகும். இது மின்னேற்றம் செய்யப்பட்ட பேட்டரிகளுக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளை பரிமாறிக்கொள்வதை உள்ளடக்கியது மற்றும் அவற்றை தனித்தனியாக மின்னேற்றம் செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.  வரைவு பேட்டரி மாற்றுக் கொள்கையின் விவரங்கள் நித்தி ஆயோக்கின் இணையதளத்தில் காணலாம்.

[httpswww.niti.gov.insitesdefaultfiles20220420220420_Battery_Swapping_Policy_Draft.pdf].

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில்மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு.எச்.டி. குமாரசாமி இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

----

TS/IR/KPG/DL


(Release ID: 2080382) Visitor Counter : 30


Read this release in: English , Urdu , Hindi