மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பால் உற்பத்தி மற்றும் கலப்படம்

Posted On: 03 DEC 2024 4:51PM by PIB Chennai

பால், இறைச்சி, முட்டை மற்றும் கம்பளி உற்பத்தி ஆகியவை   ஆண்டுதோறும் மாநில கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஒருங்கிணைந்த மாதிரி கணக்கெடுப்பு மூலம் மாநில வாரியாக கால்நடை பராமரிப்பு துறையால் மதிப்பீடு செய்யப்படுகிறது. 2022-23 ஆம் ஆண்டில், நாட்டின் மொத்த பால் உற்பத்தி 230.58 மில்லியன் டன்களாக இருந்தது மற்றும் அதே காலகட்டத்தில் ஒரு தனிநபருக்கு கிடைக்கும் பாலின் அளவு ஒரு நாளைக்கு 459 கிராமாக இருந்தது. பால் நுகர்வைப் பொறுத்தமட்டில், தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் குறிப்பிட்ட கால இடைவெளியில் குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பை நடத்துகிறது. இதில் பால் மற்றும் பால் பொருட்களின் நுகர்வு உட்பட வீட்டு அளவில் குடும்பத்தினர் உட்கொள்ளப்படும் உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அதன்படி, 2022-23 ஆம் ஆண்டில் தனிநபர் பால் நுகர்வு கிராமப்புறங்களில் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 164 கிராமாகவும், நகர்ப்புறங்களில் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 190 கிராமாகவும் இருந்தது.

இந்தியாவில் தனிநபர் பால் கிடைக்கும் அளவு 2022-23 ஆம் ஆண்டின் நுகர்வை விட அதிகமாக இருந்தது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FASSI) என்பது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும், இது இந்தியாவில் உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்கிறது.

 நாட்டில் பால் கலப்படத்தை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்தத் தகவலை மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

 

TS/PKV/DL


(Release ID: 2080369) Visitor Counter : 24


Read this release in: English , Hindi