மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
தேசிய பால்வள அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கங்கள்
प्रविष्टि तिथि:
03 DEC 2024 4:53PM by PIB Chennai
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை பிப்ரவரி-2014 முதல் நாடு முழுவதும் தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் 2021-22 முதல் 2025-26 வரை பின்வரும் இரண்டு கூறுகளுடன் செயல்படுத்துவதற்காக ஜூலை 2021 இல் மறுசீரமைக்கப்பட்டது:
(i) தேசிய பால் வளர்ச்சித் திட்டத்தின் கூறு 'ஏ', மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சம்மேளனங்கள் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் / சுய உதவிக் குழுக்கள் / பால் உற்பத்தியாளர் நிறுவனங்கள் / உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் தரமான பால் பரிசோதனைக் கருவிகள் மற்றும் முதன்மை குளிரூட்டும் வசதிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் மற்றும் வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
(ii) தேசிய பால் வளர்ச்சித் திட்டத்தின் கூறு 'பி', "கூட்டுறவு மூலம் பால்பண்ணை", பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க விவசாயிகள் அமைப்பு சார்ந்த சந்தைகளை அணுகுவதை அதிகரித்தல், பால்பண்ணை பதப்படுத்தும் வசதிகள் மற்றும் விற்பனை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
19.09 இலட்சம் கூடுதல் விவசாயிகள் சேர்க்கப்பட்டு, 22,865 பால் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டு/புதுப்பிக்கப்பட்டு, நாளொன்றுக்கு 111.04 இலட்சம் கிலோ கூடுதல் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கிராம அளவில் 47,857 பால் கூட்டுறவுச் சங்கங்களில் தானியங்கி பால் சேகரிப்பு அலகுகள் / பால் பதப்படுத்தும் கருவிகள் மற்றும் பால் பகுப்பாய்வுக் கருவிகள் மற்றும் கிராம அளவில் (தொகுப்பு அளவில்) 6,266 பால் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மின்னணு பால் கலப்பட பரிசோதனைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
கிராம அளவிலான பால் கூட்டுறவுச் சங்கங்களில் 113.30 லட்சம் லிட்டர் குளிரூட்டும் திறன் கொண்ட 5125 மொத்த பால் குளிர்விப்பான்கள் நிறுவப்பட்டுள்ளன.
நாளொன்றுக்கு 27.53 இலட்சம் லிட்டர் பால் பதப்படுத்துதல் மற்றும் 30 மெட்ரிக் டன் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சுமார் 82 பால் பண்ணைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன / புதுப்பிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட / மண்டல அளவில் 231 கூட்டுறவு பால் பண்ணைகள் (மின்னணு கலப்பட பரிசோதனை உபகரணங்கள் இல்லாதவை) கலப்படம் கண்டறியும் கருவிகள் மற்றும் அனைத்து பால் அளவுருக்கள், கலப்படப் பொருட்கள், எச்சங்கள், கன உலோகங்கள், நுண்ணுயிரியல் போன்றவற்றை பரிசோதிக்க 15 மாநில மத்திய ஆய்வகங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PKV/DL
(रिलीज़ आईडी: 2080365)
आगंतुक पटल : 87