ஊரக வளர்ச்சி அமைச்சகம்
பிரதமரின் வீட்டுவசதித் திட்டம்- ஊரகம் திட்ட பயனாளிகளுக்கான தானியங்கி விலக்கு அளவுகோல்கள்
Posted On:
03 DEC 2024 3:52PM by PIB Chennai
பிரதமரின் வீட்டுவசதித் திட்டம்- ஊரகம் (PMAY-G), மத்திய அரசின் முன்னோடித் திட்டமாகும். இது 2016 ஏப்ரல் 1 முதல் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பயனாளிகளை அடையாளம் காண SECC 2011 தரவுகளைப் பயன்படுத்தி, அடிப்படை வசதிகளுடன் மார்ச் 2024-க்குள் PMAY-G-ன் கீழ் 2.95 கோடி வீடுகளைக் கட்ட அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் வழிகாட்டுதல்களை, அதாவது மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் உறுப்பினர்களைக் கொண்ட அமலாக்கத்திற்கான கட்டமைப்பு (FFI) இறுதி செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.
09.08.2024 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், PMAY-G-ன் கீழ் 2024-25 நிதியாண்டு முதல் 2028-29 நிதியாண்டு வரை 2 கோடி கூடுதல் வீடுகளைக் கட்ட ஒப்புதல் அளித்தது. கூடுதல் தகுதியான குடும்பங்களை அடையாளம் காண்பதற்கான மாற்றியமைக்கப்பட்ட விலக்கு அளவுகோல்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரு சக்கர வாகனங்கள், விசைப்படகு, மீன்பிடி விசைப்படகு, லேண்ட்லைன் தொலைபேசி மற்றும் குளிர்சாதன பெட்டி தொடர்பான விதிகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், வருமான வரம்பு ரூ.10,000-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டு, நிலம் தொடர்பான அளவுகோல்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
PMAY-G-ன் புதிய கட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட தானியங்கி விலக்கு அளவுகோல்களின் விவரங்கள் பின்வருமாறு:
படி 1: பக்கா வீடுகளை விலக்குதல்-பக்கா கூரை மற்றும்/அல்லது பக்கா சுவர் கொண்ட வீடுகளில் வசிக்கும் அனைத்து வீடுகளும், 2 அறைகளுக்கு மேல் உள்ள வீடுகளில் வசிக்கும் குடும்பங்களும் வடிகட்டப்படுகின்றன.
படி 2: தானியங்கி விலக்கு அளவுகோல்கள்-மீதமுள்ள குடும்பங்களிலிருந்து, கீழே பட்டியலிடப்பட்டுள்ள 10 அளவுருக்களில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்யும் அனைத்து குடும்பங்களும் தானாகவே விலக்கப்படுகின்றன: -
மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று/நான்கு சக்கர வாகனம்
இயந்திரமயமாக்கப்பட்ட மூன்று / நான்கு சக்கர வாகன விவசாய உபகரணங்கள்
ரூ.50,000 அல்லது அதற்கு மேல் கடன் வரம்புள்ள கிசான் கடன் அட்டை
அரசு ஊழியராக எந்த உறுப்பினரையும் கொண்ட குடும்பம்
அரசுடன் பதிவு செய்யப்பட்ட விவசாயம் அல்லாத தொழில்களைக் கொண்ட குடும்பங்கள்
குடும்பத்தில் உறுப்பினர் மாதம் ரூ.15,000க்கு மேல் வருமானம் ஈட்டினால்
வருமான வரி செலுத்துதல்
தொழில்முறை வரி செலுத்துதல்
சொந்தமாக 2.5 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட பாசன நிலம்
சொந்தமாக 5 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட பாசன வசதி பெறாத நிலம்.
இத்திட்டத்தின் கீழ், இன்றைய தேதியில், பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் (ஊரகம்) ஒட்டுமொத்த இலக்கில், 3.33 கோடி வீடுகள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3.21 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2.67 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி இத்தகவலை தெரிவித்துள்ளார்.
***
MM/AG/DL
(Release ID: 2080309)
Visitor Counter : 40