ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தீன்தயாள் அந்தியோதயா திட்டம்- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், தகுதி வாய்ந்த அனைத்து ஊரக ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்பட்டு சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைக்கப்படுகின்றனர்

Posted On: 03 DEC 2024 3:53PM by PIB Chennai

தீன்தயாள் அந்தியோதயா திட்டம்- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமே சாதி விவரம் தொடர்பான தகவல்கள் பராமரிக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சாதி வகையைச் சேர்ந்த ஐம்பது சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள், அந்தக் குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த குழுவாகக் குறிக்கப்படுகின்றன. இதுவரை 10.05 கோடி குடும்பங்கள் 90.87 லட்சம் சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. lokos.in தளத்தில் உள்ள அறிக்கையின்படி, 28.11.2024 நிலவரப்படி குழுக்களின் வகை வாரியான விவரங்கள் பின்வருமாறு:

S.No.

வகை

சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை

1.

ஷெட்யூல்டு வகுப்பினர்

2011504

2.

ஷெட்யூல்டு பழங்குடியினர்

1228555

3.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

3514738

தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், தகுதி வாய்ந்த அனைத்து ஊரக ஏழைக் குடும்பங்களும் கண்டறியப்பட்டு, சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைக்கப்படுகின்றனர். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வறுமை நிலைகளைக் கொண்ட அனைத்து குடும்பங்களும், சமூக பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (எஸ்.இ.சி.சி) 2011-ன் படி தானாகவே குடும்பங்கள் சேர்க்கப்பட்டு, 'ஏழைகளின் பங்கேற்பு அடையாளம்' (பிஐபி) செயல்முறை மூலம் அடையாளம் காணப்பட்டு கிராம சபையால் சரிபார்க்கப்பட்ட அனைத்து தகுதியான குடும்பங்களும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இலக்குக் குழுவாக அமைகின்றன. கண்டறியப்பட்டவுடன், தகுதி வாய்ந்த அனைத்து குடும்பங்களும் சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைக்கப்படுகின்றனர்.

நகர்ப்புற ஏழைகளின் சமூக பொருளாதார விவரக்குறிப்பை அரசு தயாரிக்க தொடங்கியுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி இத்தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080092

***

TS/MM/AG/DL


(Release ID: 2080308) Visitor Counter : 27


Read this release in: English , Hindi