மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தெலங்கானாவில் கால்நடை இயக்கம் 2014

இடுகை இடப்பட்ட நாள்: 03 DEC 2024 4:55PM by PIB Chennai

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, 2014-15 நிதியாண்டு முதல் தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்துறையின் தற்போதைய தேவையைக் கருத்தில் கொண்டு, 2021-22 நிதியாண்டு முதல் தேசிய கால்நடை இயக்கத் திட்டம் திருத்தியமைக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை இயக்கத்தின் திருத்தப்பட்ட திட்டம், வேலைவாய்ப்பை உருவாக்குதல், தொழில் முனைவோர் மேம்பாடு, கால்நடைகளின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் அதன் மூலம் இறைச்சி, ஆட்டுப்பால், முட்டை மற்றும் கம்பளி உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தெலங்கானாவுக்கு 2014-15 நிதியாண்டு முதல் இன்று வரை ரூ.9939.66 லட்சம் (என்.எல்.எம்-இ.டி.பி.யின் கீழ் ரூ.4546.00 லட்சம் மானியம் உட்பட) விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஆவணங்களின்படி, இம்மாநிலம் பல்வேறு நடவடிக்கைகளுக்காக ரூ.4240.55 லட்சம் பயன்படுத்தியுள்ளது. மீதமுள்ள ரூ.1153.11 லட்சம் இதுவரை செலவிடப்படாமல் உள்ளது.

தேசிய கால்நடை இயக்கம் – தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.368.45 கோடி திட்ட மதிப்பீட்டிலான 408 திட்டங்களுக்கு இத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ.178.81 கோடி மானியத் தொகையாகும். இதன் மூலம் சுமார் 2561 விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதுடன், 2589 தனிநபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

 மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

TS/PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2080307) வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , Urdu , हिन्दी