ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லட்சாதிபதி சகோதரி மற்றும் நமோ சகோதரி முன்முயற்சிகளால் மாநில வாரியாக மற்றும் வகை வாரியாக பயனடைந்த மொத்த பெண்களின் விவரங்கள்

Posted On: 03 DEC 2024 3:53PM by PIB Chennai

தீன்தயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (DAY-NRLM) என்பது ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் மத்திய நிதியுதவி திட்டமாகும். கிராமப்புற ஏழைப் பெண்களை சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து, காலப்போக்கில் அவர்களின் கணிசமான வருமானத்தை உயர்த்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, மோசமான வறுமையிலிருந்து மீண்டு வரும் வரை தொடர்ந்து அவர்களை வளர்த்து ஆதரிப்பதன் மூலம், கிராமப்புற வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு, இது நாடு முழுவதும் (தில்லி மற்றும் சண்டிகர் நீங்கலாக) செயல்படுத்தப்படுகிறது. தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகளில் லட்சாதிபதி சகோதரியும் ஒன்று. சுய உதவிக் குழு உறுப்பினர்களை லட்சாதிபதிகளாக மாற்ற ஒரு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறை பின்பற்றப்படுகிறது, அதாவது அவர்கள் நிலையான அடிப்படையில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டுகிறார்கள். மாநில/யூனியன் பிரதேச வாரியான லக்பதி தீதிகளின் எண்ணிக்கைஇணைப்பு-1-ல் கொடுக்கப்பட்டுள்ளது. பிரிவு வாரியான தரவு அமைச்சகத்தில் பராமரிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் இதுவரை 3,18,101 பெண்கள் லட்சாதிபதி சகோதரிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.

வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் நமோ ட்ரோன் சகோதரி திட்டம், 2023-24 முதல் 2025-26 வரை DAY-NRLM இன் கீழ் 15,000 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ட்ரோன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில், உர நிறுவனங்கள் தங்கள் சொந்த ஆதாரங்கள் மூலம் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு 503 ஆளில்லா விமானங்களை வழங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் நமோ ட்ரோன் சகோதரி திட்டத்தின் கீழ் 17 ட்ரோன்கள் (ஆளில்லா விமானம்) வழங்கப்பட்டுள்ளன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி இத்தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080093

***

 

TS/MM/AG/DL


(Release ID: 2080306) Visitor Counter : 27


Read this release in: English , Urdu , Hindi