சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சுகாதார பராமரிப்பு உள்கட்டமைப்பு வசதிகளுக்கான செலவினங்களின் நிலை
Posted On:
03 DEC 2024 3:34PM by PIB Chennai
31.03.2023-ம் தேதி அன்றுள்ளபடி நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், சமூக சுகாதார மையங்கள், மாவட்ட துணை மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் & கல்லூரிகள் என (கிராமப்புறம் + நகர்ப்புறம்) அனைத்திலும் சேர்த்து மொத்தம் 8,18,661 படுக்கைகள் உள்ளன
தேசிய சுகாதாரக் கொள்கை 2017-ன் படி, சுகாதாரத்திற்கான பொது முதலீடு 2025 - ம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5%-ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கான தேசிய சுகாதார மதிப்பீடுகளின்படி, 2017 - ம் ஆண்டு முதல் -2018 - ம் ஆண்டு வரை அரசின் சுகாதார செலவினம் (GHE) பின்வருமாறு
தேசிய சுகாதார கொள்கை -2017 -ன் படி, 1000 மக்கள் தொகைக்கு 2 படுக்கை வசதிகள் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. தரவுகளின் அடிப்படையில், சுகாதார கட்டமைப்பு மாற்றத்திற்கான இந்தியா (உள்கட்டமைப்பு & மனித வளங்கள்) 2022-23, 31.03.2023 நிலவரப்படி இந்தியாவில் உள்ளஆரம்ப சுகாதார மையங்கள், சமூக சுகாதார மையங்கள், மாவட்ட துணை மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் & கல்லூரிகள் என (கிராமப்புறம் + நகர்ப்புறம்) மொத்தம் 8,18,661 படுக்கைகள் உள்ளன.
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், கோவிட் -19 அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார அமைப்புக்களின் தயார்நிலை தொகுப்பு - 2, பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் மற்றும் பிரதமரின் சுகாதார பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றின் கீழ் படுக்கை வசதிகள் உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு கணிசமான ஆதரவை வழங்கியுள்ளது. ஆயுஷ் மருத்துவ முறையின் கீழ் நாட்டில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய பொது சுகாதார சேவைகள் (IPHS) விதிமுறைகளின்படி, 20,000 முதல் 30,000 வரை எண்ணிக்கை கொண்ட மக்கள் தொகைக்கு 6 உள்நோயாளி கண்காணிப்பு படுக்கை வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார மையம், 80,000 முதல் 1,20,000 வரை எண்ணிக்கை கொண்ட மக்கள் தொகைக்கு 30 படுக்கைகள் கொண்ட சமூக சுகாதார மையங்கள் (CHC), 1,00,000 முதல் 5,00,000 வரை எண்ணிக்கை கொண்ட மக்கள் தொகைக்கு 31 முதல் 100 படுக்கை வசதிகள் கொண்ட துணை மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் 30,00,000 மக்கள் தொகைவரை 101 முதல் 500 வரை எண்ணிக்கையில் படுக்கை கொண்ட மாவட்ட மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா சிங் படேல் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://pib.gov.inPressReleasePage.aspxPRID=2080071
-----
TS/SV/KPG/DL
(Release ID: 2080253)
Visitor Counter : 26