சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி: சார்த்தி 1.0 முன்முயற்சி
Posted On:
03 DEC 2024 2:06PM by PIB Chennai
சார்த்தி 1.0 பிரச்சாரம் என்பது மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் இந்திய தேசிய சட்ட சேவைகள் ஆணையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். எஸ் சி பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், திருநங்கைகள், மூத்த குடிமக்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், துப்புரவு தொழிலாளர்கள், குப்பை அகற்றுபவர்,போதைப்பொருள் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு திட்டங்கள் மூலம் அதிகாரம் அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி விளிம்பு நிலையில் உள்ள மக்களின் சட்ட உரிமைகள், நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இடைவெளியை குறைக்க முயல்கிறது.
சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய, பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவு மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றில் சமநிலையை அடைவதற்காக, 'விழிப்புணர்வு' ஏற்படுத்துவதற்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே சமூக நலத் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்த முக்கிய தகவல்களைப் பரப்புவதற்கும், தனிநபர்களின் நலன்கள் மற்றும் உரிமைகளைப் பெறுவதற்கு உதவுவதற்கும், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் ஒரு தளமாக செயல்படும்.
இந்த பிரச்சாரம் 2015 - ம் ஆண்டில் ஐ. நா. சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டது. குறிப்பாக, வறுமையை அகற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்வதற்கும், குறிப்பாக அனைவருக்கும் தேசிய அளவில் சமூக பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நடவடிக்கைகளை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிதி, ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்புக் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதற்கும், படிப்படியாக சமத்துவத்தை அடைவதற்கும் இது அழைப்பு விடுக்கிறது.
மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்களில் தற்போதுள்ள செயல்பாடுகள் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்ய உதவும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. ராம்தாஸ் அத்வாலே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID= 2080033
***
TS/SV/KR/DL
(Release ID: 2080237)
Visitor Counter : 36