சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
பாராளுமன்ற கேள்வி: PMAGY-ன் கீழ் கிராமங்கள்
प्रविष्टि तिथि:
03 DEC 2024 2:09PM by PIB Chennai
2021-22-ம் ஆண்டில், பிரதமரின் முன்மாதிரி கிராமத்திட்டம் என்ற முந்தைய திட்டம் பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினர் முன்னேற்றத் திட்டம் (PM-AJAY) என்ற குடையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
40 விழுக்காட்டிற்கு மேல் ஆதிதிராவிடர் மக்கள் தொகை மற்றும் 500 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்கள், இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்ய தகுதியுடையவை. குடிநீர், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, சமூகப் பாதுகாப்பு, ஊரகச் சாலைகள், வீட்டுவசதி, மின்சாரம், தூய்மையான எரிபொருள், வேளாண் நடைமுறைகள், நிதி உள்ளடக்கம், டிஜிட்டல் மயமாக்கல், வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய 10 பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்கள், அடையாளம் காணப்பட்ட 50 சமூக-பொருளாதார வளர்ச்சி குறியீடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2018-19-ம் ஆண்டு முதல், 29851 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, 36,896 பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 41,29,288 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். "ஆதர்ஷ் கிராமம்" என்ற பெயரில் கிராமங்களை மதிப்பீடு செய்வதற்கான 50 சமூக-பொருளாதார வளர்ச்சி கண்காணிப்பு குறியீடுகளின் பட்டியல் இணைப்பில் உள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080035
***
TS/MM/AG/KR/DL
(रिलीज़ आईडी: 2080234)
आगंतुक पटल : 73