மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்துவதை ஜனநாயகப்படுத்துதல்

Posted On: 03 DEC 2024 3:28PM by PIB Chennai

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தனிப்பட்ட  வணிகப் பிரிவு  மூலம், சிபிபி தளத்தின் வழியாக 2024  ஆகஸ்ட் 16, அன்று பணியாளர் சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது. செயற்கை நுண்ணறிவு, கம்ப்யூட் மற்றும் கிளவுட் சேவைகளை வழங்க முகமைகளை பட்டியலிடுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இந்த முயற்சி இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு இயக்கத்தை ஆதரிப்பதற்காக 10,000 கிராபிக்ஸ் செயல்முறை பிரிவுகள் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு பயனளிக்கிறது.

2024 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற ஏலத்திற்கு முந்தைய கூட்டத்தில் கிளவுட் சேவை வழங்குநர்கள், நிர்வகிக்கப்பட்ட சேவை வழங்குநர்கள், சிறு, குறு மற்றும் நடுத்ர தொழில் நிறுவனங்கள் மற்றும் தரவு மைய சேவை வழங்குநர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட சேவை வழங்குநர்கள் உற்சாகமான பங்கேற்று இருந்தனர். ஏலம் சமர்ப்பிப்பு காலக்கெடு 2024 நவம்பர் 28,  வரை நீட்டிக்கப்பட்டு ஏலம் சமர்ப்பிப்பு செயல்முறை அதே நாளில் முடிவடைந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080066

-----

TS/IR/KPG/KR/DL


(Release ID: 2080231) Visitor Counter : 30


Read this release in: English , Urdu , Hindi