அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

"ஐஐடி ரோபரின் ஆவார் என்ற 4 வது நிறுவன தினம், பஞ்சாபில் தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்துவதற்கான விவசாயிகளின் ஈடுபாட்டைக் குறிக்கிறது"

Posted On: 03 DEC 2024 3:10PM by PIB Chennai

ஐஐடி ரோபாரின் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அறக்கட்டளை (iHub – AWaDH) தனது 4-வது நிறுவனத் தினத்தை, சிறப்பு விவசாயிகள் பங்கேற்கும் அமர்வுடன் கொண்டாடுகிறது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் (DST), இடைநிலை சைபர்-இயற்பியல் அமைப்புகளுக்கான தேசிய திட்டத்தின் (NM-ICPS) கீழ், ஆவாத்(AWaDH) ஆழமான தொழில்நுட்ப ஆராய்ச்சி, புத்தொழில்கள் மற்றும் தொழில்காப்பகம் மூலம் விவசாயம், நீர், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் மற்றும் Iஐசிபிஎஸ் ஆகியவற்றில் புதுமைகளை புகுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பத் துறையிலிருந்து ₹110 கோடி மற்றும் ஸ்டார்ட்அப் இந்தியாவின் ₹5 கோடி நிதி ஆதரவுடன்விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அதிநவீன தீர்வுகளை உருவாக்க ஆவாத் செயல்பட்டு வருகிறது. AWaDH 70- க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. 100+ க்கும் மேற்பட்ட வேளாண் தொழில்நுட்பம் மற்றும் நீர் தொழில்நுட்ப புத்தொழில்களை வளர்த்துள்ளதுடன், செயற்கை நுண்ணறிவு மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸில் கவனம் செலுத்துவதன் மூலம், சைபர்-இயற்பியல் அமைப்புகளில் 5000 இளைஞர்களுக்கு திறன் பயிற்சியும் அளித்துள்ளது. வேளாண் மற்றும் நீர் தொடர்பான தொழில்நுட்பங்களுக்கான வளர்ந்து வரும் தொழில்நுட்ப தளங்களைக் கொண்டுவருவதற்காக நாடு முழுவதும் சிபிஎஸ் ஆய்வகங்களை அமைப்பதன் மூலம் AWaDH முன்னேற்றம் கண்டுள்ளது.

விவசாயிகளின் தனித்துவமான தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம், தனது கண்டுபிடிப்புகள் நடைமுறை ஆகியவை நிலையானவை மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதை உறுதிப்படுத்த ஆவாத் உறுதிபூண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080060

***

 

TS/MM/AG/KR/DL


(Release ID: 2080226) Visitor Counter : 27


Read this release in: English , Hindi