கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
பஞ்சாபில் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்துகள்
Posted On:
03 DEC 2024 12:45PM by PIB Chennai
தேசிய நீர்வழி போக்குவரத்துகள் சட்டம் 2016 - ன் படி அறிவிக்கப்பட்ட 111 தேசிய நீர்வழிப் பாதைகளில், 4 தேசிய நீர்வழிப் பாதைகள், அதாவது NW-17, NW-45, NW-84 & NW-98 ஆகியவை பஞ்சாப் மாநிலத்தில் உள்ளன. நாட்டில் செயல்படும் தேசிய நீர்வழிப் பாதைகளின் விவரங்கள் இணைப்பு-1-தரப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்ட இந்த தேசிய நீர்வழிப் பாதைகளை மேம்படுத்துவதே மத்திய அரசின் நோக்கமாகும்.
இணைப்பு-1
நடைமுறை செயல்பாட்டு நீர்வழி போக்குவரத்துகளின் பட்டியல்
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
வ.எண் மாநிலம் யூனியன் பிரதேசம் தேசிய நீர்வழிகள்
1 உத்திரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் NW-1 {கங்கா-பாகீரதி-ஹூக்ளி நதி அமைப்பு (ஹால்டியா-அலகாபாத்)}
2 அசாம் NW-2 {பிரம்மபுத்திரா நதி (துப்ரி-சதியா)}
3 கேரளா NW-3 (மேற்கு கடற்கரை கால்வாய்)
4 ஏ.பி. NW-4 (கிருஷ்ணா கோதாவரி நதி அமைப்புகள்)
5 மகாராஷ்டிரா NW-10 (அம்பா நதி)
6 மகாராஷ்டிரா NW-83 (ராஜ்புரி க்ரீக்)
7 மகாராஷ்டிரா NW-85 (ரேவதண்டா க்ரீக்-குண்டலிகா நதி அமைப்பு)
8 மகாராஷ்டிரா NW-91 (சாஸ்திரி நதி - ஜெய்காட் க்ரீக் அமைப்பு)
9 மகாராஷ்டிரா NW-53 (கல்யாண்-தானே-மும்பை நீர்வழி, வசாய் க்ரீக் மற்றும் உல்ஹாஸ் நதி)
10 கோவா NW-68 (மாண்டோவி ஆறு)
11 கோவா NW-111 (ஜுவாரி நதி)
12 குஜராத் NW-73 (நர்மதா ஆறு)
13 குஜராத் NW-100 (டாபி நதி)
14 குஜராத் NW-48 (ஜவாய்-லுனி-ரான் ஆஃப் கட்ச் ரிவர்)
15 அசாம் NW-16 (பராக் ஆறு)
16 மேற்கு வங்காளம் NW-44 (இச்சாமதி ஆறு)
17 பீகார் NW-94 (சோன் நதி)
18 மேற்கு வங்காளம் NW-97 (சுந்தரவன நீர்வழி)
19 ஒடிசா NW-64 (மகாநதி ஆறு)
20 ஒடிசா NW-5 (கிழக்கு கடற்கரை கால்வாய் மற்றும் மடாய் ஆறுபிராம்மணி-கர்சுவா-தம்ரா ஆறுகள்மகாநதி டெல்டா ஆறுகள்)
21 மேற்கு வங்காளம் NW-86 (ரூப்நாராயண் ஆறு)
22 கேரளா NW-9 (ஆலப்புழா-கோட்டயம் - அதிரம்புழா கால்வாய்)
23 அசாம் NW-31 (தன்சிரிசாத்தே)
24 கேரளா NW-8 (ஆலப்புழா-சங்கனாசேரி கால்வாய்)
25 ஒடிசா NW-14 (பைதர்னி ஆறு)
26 ஒடிசா NW-23 (புதா பலங்கா)
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080011
-----
TS/SV/KPG/KR/DL
(Release ID: 2080218)
Visitor Counter : 24