நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

அடல் புத்தாக்க இயக்கம், இளைஞர்கள் தலைமையிலான நிலையான எதிர்காலத் தீர்வுகளுக்கு முன்னோடியாக SheSTEM 2024 -ஐ கொண்டாடியது

Posted On: 03 DEC 2024 11:19AM by PIB Chennai

நித்தி ஆயோக்கின்கீழ் செயல்படும் அடல் புத்தாக்க இயக்கமானது ஸ்வீடன் தூதரகத்தில் உள்ள அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு அலுவலகம், , நோர்டிக் ஒத்துழைப்பாளர்களான -  நார்வே,  டென்மார்க் நாடுகளின் புத்தாக்க மையங்கள்,  பிசினஸ் பின்லாந்து ஆகியவற்றுடன் இணைந்து, SheSTEM 2024 நிகழ்ச்சி வெற்றிகரமாக  நிறைவடைந்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. இந்த வருடாந்திர முயற்சி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல்,கணிதம் ஆகியவற்றைக் கொண்ட  ஸ்டெம் -ல் பெண்களின் பங்களிப்பைக் கொண்டாடுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகியவற்றில் ஈடுபட்டு அதையே தொழில்வாழ்க்கையாக மேற்கொள்ள  இளம் மனதை ஊக்குவிப்பதையும் அதன் மூலம் அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் ஊக்கியாகவும் இது செயல்படுகிறது.

SheSTEM 2024 சவால் இந்தியா முழுவதும் 6-12-ம் வகுப்பு மாணவர்களை பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் சேமிப்பு (BEST) அமைப்புகளில் கவனம் செலுத்தும் புதுமையான யோசனைகளைச் சமர்ப்பிக்க அழைத்தது. இந்தியா-நார்டிக் பெஸ்ட் திட்டத்தின் ஒரு பகுதியாக, எரிசக்தி தீர்வுகளை முன்னெடுப்பதன் மூலம் நிலைத்தன்மையை வளர்ப்பதை இந்தச் சவால் நோக்கமாகக் கொண்டுள்ளது. பங்கேற்பாளர்கள் தங்கள் முன்மாதிரிகள் அல்லது ஆற்றல் சேமிப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கருத்துகளை இரண்டு நிமிட வீடியோ வடிவத்தில் வழங்கினர். இந்திய இளைஞர்களின் படைப்பாற்றல், சிக்கலைத் தீர்க்கும் திறன் மற்றும் முன்னோக்கு சிந்தனை மனநிலையை நிரூபிக்கும் 1000-க்கும் மேற்பட்ட சமர்ப்பிப்புகள் இந்த போட்டிக்கு சிறப்பு  சேர்த்தன. வழங்கப்பட்ட யோசனைகள் அனைத்தும் நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆகியவற்றில் தலைமைப் பாத்திரங்களை ஏற்கத் தயாராக இருக்கும் இளம் கண்டுபிடிப்பாளர்களின் மிகப்பெரிய திறனை வெளிப்படுத்தின.

SheSTEM 2024 ஆனது மாணவர்கள் முக்கியமான ஸ்டெம் தலைப்புகளில் ஈடுபடுவதற்கும் உலகளாவிய நிலைத்தன்மை முயற்சிகளுக்கு பங்களிப்பதற்கும் ஒரு தளத்தை வழங்கியது. இந்த நிகழ்வு ஒத்துழைப்பு மற்றும் குழுப்பணியின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டியது. இன்றைய சவால்களை எதிர்கொள்வதில் கூட்டு கண்டுபிடிப்புகளின் சக்தி அவசியம் என்பதை அது எடுத்துக்  காட்டியது.

இந்தியாவுக்கான ஸ்வீடன் தூதர் ஜான் தெஸ்லெஃப் SheSTEM 2024-ன் தாக்கம் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார், "புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பு ஒரு நிலையான உலகின் மையத்தில் உள்ளது, உலகம் தன்னைப் பாதுகாக்க கடுமையாக உழைக்கிறது. SheSTEM 2024 என்பது அடுத்த தலைமுறையை புதுமைப்படுத்தவும் ஆற்றல் சேமிப்பு மற்றும் தொழில்நுட்பங்களுக்கான தீர்வுகளை உருவாக்கவும் ஊக்குவிக்கவும் உதவக்கூடிய சரியான திசையில் ஒரு படிக்கல்லாகும். இந்த ஆண்டு, SheSTEM சவால் இந்தியா-நோர்டிக் பேட்டரி மற்றும் எரிசக்தி சேமிப்பு தொழில்நுட்ப திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது கல்வி, வணிகம் மற்றும் அரசு ஆகியவற்றில் இந்தியாவுடன் கூட்டாண்மை பகுதிகளை ஆராய நோர்டிக் கூட்டாளர்களை ஒன்றிணைக்கிறது.

அடல் புத்தாக்க இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் சிந்தன் வைஷ்ணவ் இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இளம் திறமைகள், புத்தாக்கம் மற்றும் இந்திய மாணவர்களின் எல்லையற்ற திறன் ஆகியவற்றின் கொண்டாட்டமான SheSTEM 2024 இன் ஒரு பகுதியாக இருப்பதில் இயக்கம் பெருமிதம் கொள்கிறது. எரிசக்தி சேமிப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்த ஆண்டின் சவால், மிக முக்கியமான உலகளாவிய சவால்களில் சிலவற்றை நேரடியாக எதிர்கொள்கிறது. இந்தத் துறையில் மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம், நாங்கள் எதிர்கால ஸ்டெம் தலைவர்களை வளர்ப்பது மட்டுமல்லாமல், நிலையான மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் உலகத்தை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறோம் என்று அவர் கூறினார்.

SheSTEM 2024-ன் வெற்றி,, இளைஞர்கள் தலைமையிலான கண்டுபிடிப்புகளின் வியக்கவைக்கும்  திறனையும், நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் ஸ்டெம் கல்வி வகிக்கும் முக்கிய பங்கையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த நிகழ்வு இளம் மனங்கள் தங்கள் மதிநுட்பத்தை வெளிப்படுத்த ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்கியுள்ளது, மேலும் அடுத்த தலைமுறை சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் மற்றும் தலைவர்களை ஆதரிப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் அடல் புத்தாக்க இயக்கம் உறுதிபூண்டுள்ளது.

***

(Release ID: 2079994)

TS/PKV/KR

 


(Release ID: 2080049) Visitor Counter : 33


Read this release in: English , Urdu , Hindi , Gujarati