தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் முதலீடு

प्रविष्टि तिथि: 02 DEC 2024 6:56PM by PIB Chennai

மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறையால் அறிவிக்கப்பட்ட முதலீட்டு முறையின்படி நிதி முதலீடு செய்யப்படுகிறது. தொழிலாளர்  வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) கடன் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் இரண்டிலும் பரிந்துரைக்கப்பட்ட முறையின்படி முதலீடு செய்துள்ளது. 31.03.2015 அன்று நடைபெற்ற மத்திய அறங்காவலர் வாரியத்தின் 207-வது கூட்டத்தின் ஒப்புதலின்படி, ஆகஸ்ட் 2015 முதல் பரிமாற்ற வர்த்தக நிதிகளில் இபிஎப்ஓ முதலீடு செய்யத் தொடங்கியுள்ளது.

31.03.2024 நிலவரப்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் நிர்வகிக்கப்பட்ட பல்வேறு நிதிகளின் மொத்த தொகுப்பு ரூ.24.75 லட்சம் கோடியாகும்.

(ரூ கோடியில்)

கடன் முதலீடுகள் (இந்திய பொதுக் கணக்கில் வைத்திருக்கும் தொகை உட்பட)

பரிமாற்ற வர்த்தக நிதி முதலீடுகள்

22,40,922.30

2,34,921.49

 

பிஎஸ்இ-சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி-50 குறியீடுகளை பிரதிபலிக்கும் பரிமாற்ற வர்த்தக நிதி மூலம் ஈ.பி.எஃப்.ஓ தொடர்ந்து ஈக்விட்டி சந்தைகளில் முதலீடு செய்கிறது. மேலும், இபிஎஃப்ஓ அவ்வப்போது மத்திய அரசின் கார்ப்பரேட் நிறுவனங்களான பாரத் 22 மற்றும் சிபிஎஸ்இ குறியீடுகளை கண்காணிக்கும் இடிஎப் நிதிகளில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்வதற்காக கட்டமைக்கப்பட்ட பரிமாற்ற வர்த்தக நிதிகளில் முதலீடு செய்துள்ளது.

 

ஈ.பி.எப்.ஓ.  ஆண்டு வாரியாக செய்துள்ள முதலீடுகள் வருமாறு:-

கடந்த 7 ஆண்டுகளில் இபிஎப்ஓ-வின் இடிஎப் முதலீட்டு தரவு (ரூ. கோடிகளில்)

 

நிதியாண்டு

இடிஎப்

2017-18

22,765.99

2018-19

27,974.25

2019-20

31,501.11

2020-21

32,070.84

2021-22

43,568.08

2022-23

53,081.26

2023-24

57,184.24

2024-25 (அக்டோபர் 2024 வரை)

34,207.93

 

ஈபிஎஃப்ஓ பங்குச் சந்தையில் எந்தவொரு தனிப்பட்ட பங்குகளிலும் நேரடியாக முதலீடு செய்வதில்லை.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

PKV/AG/DL


(रिलीज़ आईडी: 2079926) आगंतुक पटल : 71
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी