குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
நெருக்கடியை எதிர்கொள்ளும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஆய்வு செய்யும் திட்டங்கள்
Posted On:
02 DEC 2024 5:33PM by PIB Chennai
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் நாடு முழுவதும் இத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம், குறு மற்றும் சிறு நிறுவனங்கள்-தொகுப்பு மேம்பாட்டுத் திட்டம், தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டம், கொள்முதல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவுத் திட்டம், எம்எஸ்எம்இ செயல்திறனை உயர்த்துதல் மற்றும் துரிதப்படுத்துதல், சர்வதேச ஒத்துழைப்புத் திட்டம், தேசிய எஸ்சி எஸ்டி மையம், எம்எஸ்எம்இ சாம்பியன்கள் போன்றவை இந்த திட்டங்களில் அடங்கும்.
குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.500 லட்சம் வரை பிணையம் மற்றும் மூன்றாம் தரப்பு உத்தரவாதம் போன்ற இடையூறுகளின்றி கடன் வழங்க குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
மத்திய பட்ஜெட் 2024-25 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான நிதி, ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை உள்ளடக்கிய ஒரு தொகுப்பை அறிவித்தது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான ஆதரவு, உற்பத்தித் துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம், எம்.எஸ்.எம்.இ கடனுக்கான புதிய மதிப்பீட்டு மாதிரி, நெருக்கடி காலங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி, முத்ரா கடன் உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு,
இந்தத் தகவலை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
-----
(Release Id 2079786)
IR/KPG/DL
(Release ID: 2079925)
Visitor Counter : 33