குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் விரிவாக்கம்
प्रविष्टि तिथि:
02 DEC 2024 5:34PM by PIB Chennai
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் 2008-09 ஆம் ஆண்டு முதல் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற பெரிய கடனுடன கூடிய மானியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை தேசிய அளவில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் இணைந்து உத்தராகண்ட் உள்ளிட்ட நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பண்ணை சாரா துறைகளில் குறுந்தொழில்களை உருவாக்கி வருகிறது.
பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஒரு மத்திய அரசின் திட்டமாக இருப்பதால், கிராமப்புறங்களில் திட்ட செலவில் 25% மற்றும் நகர்ப்புறங்களில் 15% நிதி மானியத்துடன் பொதுப் பிரிவு பயனாளிகளுக்கு உதவுகிறது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், வடகிழக்கு பிராந்தியம், மலைப்பகுதி மற்றும் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகள், மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களில், விளிம்புத் தொகை மானியம் கிராமப்புறங்களில் 35% மற்றும் நகர்ப்புறங்களில் 25% ஆகும். இத்திட்டத்தின் அதிகபட்ச செலவு உற்பத்தித் துறையில் ரூ.50 லட்சமும், சேவைத் துறையில் ரூ.20 லட்சமும் ஆகும்.
இந்தத் தகவலை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
----
IR/KPG/DL
(रिलीज़ आईडी: 2079921)
आगंतुक पटल : 64