இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இளைஞர் ஈடுபாட்டுக்கான திட்டங்கள்
Posted On:
02 DEC 2024 6:33PM by PIB Chennai
தேசிய இளைஞர் கொள்கை, இந்திய இளைஞர்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை ஒருங்கிணைத்து, சமூகத்தின் இணக்கமான வளர்ச்சிக்கு வழிவகை செய்வதையும், இளைஞர்களின் ஆற்றலை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை நோக்கி திறம்பட பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்துறையின் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டிய கோட்பாடுகளை இக்கொள்கை விரிவாக வகுத்துள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கிராமப்புறங்கள் உட்பட நாடு முழுவதிலும் இளைஞர் தலைமைத்துவம், திறன்கள் மற்றும் விளையாட்டை மேம்படுத்துவதற்காக நிதி வழங்குகிறது.
.இத்துறையால் 2023-24-ம் நிதியாண்டில் நடத்தப்பட்ட பல்வேறு இளைஞர் ஈடுபாடு அனுபவ கற்றல் பயிற்சி மற்றும் பிற திட்டங்களில் மொத்தம் 4,96,39,201 இளைஞர்கள் பங்கேற்றனர்.
கள அமைப்புகள் மூலம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது, எடுத்துக்காட்டாக, மை பாரத் இணையதளத்தின் மூலம் பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கு பல்வேறு அனுபவ கற்றல் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகள் இளைஞர்களுக்கு கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றன.
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், நாடு முழுவதும் உள்ள கிராமப்புற இளைஞர்களிடையே, குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் பின்தங்கிய இளைஞர்களுக்கு, தொழில் முனைவோர் வாய்ப்புகளை உருவாக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் பல்வேறு திறன் பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தது. 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கு 1059.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
-----
IR/KPG/DL
(Release ID: 2079919)
Visitor Counter : 25