பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
கிராமப்புறங்களில் சமையல் எரிவாயு பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு
Posted On:
02 DEC 2024 4:09PM by PIB Chennai
பிரதமரின் இலவச எரிவாயு இணைப்புத் திட்டமான உஜ்வாலா யோஜனா (PMUY) நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் நோக்கத்துடன் 2016 மே மாதம் தொடங்கப்பட்டது. 2024 நவம்பர் 1 நிலவரப்படி, இந்தியாவில் சமையல் எரிவாயு நுகர்வோரின் எண்ணிக்கை 32.83 கோடியாக உள்ளது. இதில் பிரதமரின் உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் 10.33 கோடி பயனாளிகள் உள்ளனர். இது 2016 ஏப்ரல் 1 நிலவரப்படி 16.63 கோடி சமையல் எரிவாயு நுகர்வோர் இருந்தனர். அதை ஒப்பிடும்போது இப்போது எரிவாயு நுகர்வோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தை அமல்படுத்தியதன் விளைவாக, ஊரகப் பகுதிகளில் சமையல் எரிவாயு பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. நாட்டின் கிராமப்புறங்களில் சமையல் எரிவாயு பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக, பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தை ஊக்குவிப்பதற்கான இயக்கங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/DL
(Release ID: 2079911)
Visitor Counter : 28