விண்வெளித்துறை
இந்தியா வந்துள்ள இத்தாலி அமைச்சர் அடால்ஃபோ உர்சோ, மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் சந்திப்பு
Posted On:
02 DEC 2024 4:24PM by PIB Chennai
இந்தியா வந்துள்ள இத்தாலியின் தொழில் நிறுவனங்கள் மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் திரு அடால்ஃபோ உர்சோ, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து, இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இரு அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பு அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் விண்வெளி ஆய்வு ஆகியவற்றில் கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தியது.
டாக்டர் ஜிதேந்திர சிங், அடோல்ஃபோவை அன்புடன் வரவேற்று, இந்திய-இத்தாலிய உறவுகளின் வலுவான அடித்தளத்தை வலியுறுத்தினார்.
"இந்தியாவும், இத்தாலியும் அறிவியல் ஒத்துழைப்பின் துடிப்பான வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் புதுமை மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வளர்ப்பதற்கு
நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
கூட்டத்தின் போது, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்ற துறைகளில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் இத்தாலியின் ஆர்வம் முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டது. நீடித்த எதிர்காலத்திற்கான புதுமையான தீர்வுகளை முன்வைப்பதன் மூலமும், கூட்டு முயற்சிகள் மூலமும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான திறனை இரு நாடுகளும் அங்கீகரித்தன.
அறிவியல் ஆராய்ச்சியில், குறிப்பாக டிரிஸ்டே நகரில் உள்ள ஏறத்தாழ ஒளியின் வேகத்தில் ஆய்வகத்தில் ஒளிக்கதிர்களை உருவாக்கும் (சின்குரோட்ரான்) வசதியான எலெட்ரா மூலம் இந்தியாவும் இத்தாலியும் நீண்டகால கூட்டாண்மையை அனுபவித்து வருகின்றன. இத்தாலிய விஞ்ஞானிகளுக்கு அடுத்தபடியாக இந்த வசதியை பயன்படுத்தும் இரண்டாவது பெரிய பயனர்களாக இந்திய விஞ்ஞானிகள் உள்ளனர். 2016 முதல், கூட்டாக கட்டப்பட்ட விளிம்புவிளைவு கற்றைகள், 'XRD2' மற்றும் 'XPRESS' ஆகியவை பொருள் அறிவியல் மற்றும் பொறியியலில் அதிநவீன ஆராய்ச்சிக்கு ஆதரவளித்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2079743
-----------
TS/MM/RS/DL
(Release ID: 2079870)
Visitor Counter : 24