புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீடு

இடுகை இடப்பட்ட நாள்: 02 DEC 2024 3:28PM by PIB Chennai

2011-12-ம் ஆண்டு முதல் 2022-23-ம் ஆண்டு வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியை தொகுப்பதற்கான அடிப்படை ஆண்டை புதுப்பிக்க அரசு முடிவு செய்துள்ளது. திருத்தியமைக்கப்பட்ட வரிசையில் தேசிய கணக்குகள் புள்ளியியல் தொகுப்புக்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கவும், புதிய புள்ளி விவரங்களை அடையாளம் காணவும், மத்திய, மாநில அரசுகள், ரிசர்வ் வங்கி, கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய தேசிய கணக்குகள் புள்ளியியல் குறித்த ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புள்ளியியல் அமைப்பை மேம்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கையான ஆலோசனைக் குழு அமைத்தல் செயல்பாடானது புள்ளியியலில் சீரான, துல்லியமான அறிக்கை அளிப்பது, தரப்படுத்துதல் போன்றவற்றுக்கும் புள்ளியியல் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் உதவும். 

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் புள்ளியியல், திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

 

TS/PLM/KR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2079806) வருகையாளர் எண்ணிக்கை : 103
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी