நிலக்கரி அமைச்சகம்
சக்தி திட்டத்தின் நோக்கங்கள்
Posted On:
02 DEC 2024 4:28PM by PIB Chennai
இந்தியாவில் வெளிப்படைத் தன்மையுடன் கோயாலா நிலக்கரியைப் பயன்படுத்துதல் மற்றும் ஒதுக்கீடு செய்வதற்கான திட்டத்தை (SHAKTI), 2017-ம் ஆண்டில் அரசு அறிமுகப்படுத்தியது. இது 22.05.2017 அன்று நிலக்கரி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தக் கொள்கையில் திருத்தங்கள் நிலக்கரி அமைச்சகத்தால் 25.03.2019 மற்றும் 08.11.2023 அன்று வெளியிடப்பட்டன. சக்தி கொள்கை என்பது மின்சாரத் துறைக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்வதற்கான ஒரு வெளிப்படையான வழியாகும்.
மின்சார அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு முகமை, மாநிலங்களின் ஒரு குழுவிற்கு தேவைப்படும் மின்சாரத் தேவையை அந்த மாநிலங்களிடமிருந்து கோராமலேயே ஒருங்கிணைக்கும் / கொள்முதல் செய்யும் நேர்வுகளுக்கும் நிலக்கரி இணைப்பு பொருந்தும்.
மத்திய மற்றும் மாநில மின் உற்பத்தி நிறுவனங்கள் அழுத்தப்பட்ட மின் சொத்துக்களின் சக்தியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட முடியும்.
கடனை திருப்பிச் செலுத்துவதை உறுதி செய்வதற்கான பொறிமுறை.
கோல் இந்தியா லிமிடெட் மற்றும் எஸ்சிசிஎல் நிறுவனங்கள் மின் துறைக்கு உற்பத்தி செய்யும் நிலக்கரிக்கான புதியநிலக்கரி இணைப்புகள் சக்தி கொள்கையின் கீழ் ஒதுக்கப்படுகின்றன. இந்தக் கொள்கை கோல் இந்தியா, எஸ்சிசிஎல் மற்றும் மின் உற்பத்தியாளர்களின் நலன்களை சமன் செய்கிறது, ஏனெனில் இது நிலக்கரி ஒதுக்கீட்டிற்கான பல்வேறு வழிமுறைகளைக் கொண்டுள்ளது, இதில் ஏல வழிமுறை (நிலக்கரியின் அறிவிக்கப்பட்ட விலையில் பிரீமியம்) அடங்கும், மேலும் இந்த ஏலங்கள் அவ்வப்போது நிலக்கரி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2079744
***
PKV/AG/KR
(Release ID: 2079772)
Visitor Counter : 33