சுற்றுலா அமைச்சகம்
சுற்றுலா அமைச்சகம் இசை சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு இந்திய கலாச்சார பாரம்பரியத்துடன் இளைஞர்களை இணைக்கிறது
प्रविष्टि तिथि:
02 DEC 2024 12:45PM by PIB Chennai
கிருஷ்ணவேணி சங்கீத நீரஜாஜனம் விழா 2024 டிசம்பர் 1, அன்று ஆந்திரப்பிரதேசத்தில் தொடங்கியது.
கலாச்சார அமைச்சகங்கள் மற்றும் ஆந்திர அரசு ஆகியவற்றுடன் இணைந்து சுற்றுலா அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுகள், மாநிலத்தின் துடிப்பான இசை பாரம்பரியம் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடின. வசீகரிக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் உற்சாகமான பார்வையாளர்களுடன் விஜயவாடாவில் 2024 டிசம்பர் 6 முதல் 8, திட்டமிடப்பட்டுள்ள திருவிழா நடைபெறும். இதற்கான முன்னேற்பாடாக முன்னோட்ட நிகழ்ச்சிகள் அமைந்தன.
ஸ்ரீகாகுளத்தில் உள்ள அரசவல்லியில் உள்ள ஸ்ரீ சூரியநாராயண சுவாமி கோவிலில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஸ்ரீகாகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் திரு கோண்டு சங்கர் ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நரசன்னபேட்டா சட்டப்பேரவை உறுப்பினர் திரு பாகுரமணமூர்த்தியும், ஸ்ரீகாகுளம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் திருமதி சாய் பிரதியுஷா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். திருமதி மண்டா சுதாராணி மற்றும் அவரது குழுவினரின் நிகழ்ச்சி சிறப்பம்சமாக இருந்தது. இது 300-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்தது.
மங்களகிரியில்,ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் நரசிம்ம சுவாமி கீர்த்தனைகளை மையமாகக் கொண்ட பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. விஜயவாடா கண்டசாலா அரசு இசைக் கல்லூரி முதல்வர் திருமதி கிருஷ்ணவேணி, உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். கலைஞர்கள் ஸ்ரீ மல்லாடி நாராயண சர்மா, ஸ்ரீ மல்லாடி யமுனா ராமன் மற்றும் அவர்களது குழுவினரின் நிகழ்ச்சி பார்வையாளர்களைக் கவர்ந்தது.
இசை, பக்தி மற்றும் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றுக்கு இடையேயான தொன்றுதொட்ட தொடர்பைக் கொண்டாட 2024 டிசம்பர் 6 முதல் 8 வரை விஜயவாடாவில் இணைய சுற்றுலா அமைச்சகம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2079647
*****
(Release ID: 2079647)
TS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2079740)
आगंतुक पटल : 59