நிதி அமைச்சகம்
நாட்டின் கிழக்கில் உள்ள 4 மாநிலங்களைச் சேர்ந்த 8 மண்டல ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆய்வு
Posted On:
29 NOV 2024 6:56PM by PIB Chennai
நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்களான பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள 8 மண்டல ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு செய்தார்.
பாட்னாவில் நடைபெற்ற நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் பீகார் மாநில துணை முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரி, மத்திய நிதி சேவைகள் துறை செயலாளர் திரு எம் நாகராஜூ, அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரிகள், மண்டல ஊரக வங்கிகளின் தலைவர்கள் உள்ளிட்ட மூத்த உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மண்டல ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் அவற்றின் தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்துதல், விவசாய மற்றும் குறு சிறு தொழில் நிறுவனங்களின் வர்த்தக செயல்பாடுகளுக்கான வங்கி செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஊரக பகுதிகளில் பொருளாதார மேம்பாட்டை அதிகரிக்கும் வகையில் மண்டல, ஊரக வங்கிகளின் பங்களிப்பு குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
விவசாயம் மற்றும் பால் வளம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் போன்ற வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் கடனுதவியை அதிகரிப்பது குறித்து அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2079149
***
TS/SV/AG/DL
(Release ID: 2079200)