கலாசாரத்துறை அமைச்சகம்
தேசிய அருங்காட்சியகத்தில் வெறுமை குறித்த கண்காட்சியை கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கிவைத்தார்
Posted On:
29 NOV 2024 6:45PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் "ஷூன்யதா: வெறுமை " என்ற சிறப்பு கண்காட்சியை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று தொடங்கிவைத்தார். தேசிய அருங்காட்சியகத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் பி ஆர் மணி, தூதரக அதிகாரிகள், நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், கலைஞர்கள் மற்றும் அருங்காட்சியக தொழில்முறை நிபுணர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ஷெகாவத், புத்த பகவானின் வெறுமை என்னும் கருத்தியலே அனைத்து தத்துவங்களின் மையமாக உள்ளது என்று கூறினார். இந்த வெறுமை என்ற வார்த்தைக்கு வெற்றிடம் என்ற தவறான அர்த்தம் ஏற்பட்டு விட்டதாக கூறிய அமைச்சர், இருப்பினும் அந்த கருத்தியல் தற்போதும் மனிதகுலத்தை இணைக்கும் அம்சமாக உள்ளது என்று தெரிவித்தார். புத்த பகவான் போதித்த தர்மம் என்ற கொள்கையை பின்பற்றுவதன் மூலமே இதற்கு தீர்வு காண முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த கண்காட்சி வெறுமை என்பதன் சாரத்தை சிறப்பாக பிரதிபலிக்கிறது என டாக்டர் பி ஆர் மணி கூறினார். இந்த கண்காட்சியில், கவிஞரும், கலைஞருமான திரு அபை வரைந்த எழுச்சிமிகு ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2079145
***
TS/PKV/AG/DL
(Release ID: 2079198)
Visitor Counter : 7