நிதி அமைச்சகம்
கடனுதவி வழங்குவது குறித்த நிகழ்ச்சி மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது
Posted On:
29 NOV 2024 6:56PM by PIB Chennai
பீகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற கடனுதவி தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கடனுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு வங்கிகள் மூலம் 49,137 பயனாளிகளுக்கு 1388 கோடி ரூபாய் அளவுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பல்வேறு ஊரக சாலை அமைப்பு திட்டத்தின் கீழ் 74 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்ய நபார்டு வங்கி மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டது. வங்கிகள் மாநில தொழில் மேம்பாட்டு வங்கிகள் மூலம் பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கான நிதியுதவிகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் 5 கிளைகளையும், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் 25 மேக்ஸ் மையங்களையும் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2079150
***
SV/AG/DL
(Release ID: 2079195)
Visitor Counter : 9