சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆஷா ஊழியர்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
Posted On:
29 NOV 2024 3:57PM by PIB Chennai
ஆஷா ஊழியர்களுக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட பொது சுகாதார நடைமுறையை வலுப்படுத்தும் முக்கிய பொறுப்பு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளைச் சார்ந்ததாகும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொது சுகாதார முறையை வலுப்படுத்த தேவை அடிப்படையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது.
நாட்டில் ஆஷா ஊழியர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.2000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகைகளும் வழங்கப்படுகின்றன. ஆஷா ஊழியர்களுக்கான கூடுதல் ஊக்கத் தொகைகளுக்கு 2022 செப்டம்பர் மாதம் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் ஆஷா ஊழியர்கள் குழு அடிப்படையிலான ஊக்கத் தொகைகளை பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாக மாறியுள்ளனர். இந்தவகையில் மாதத்திற்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.
ஊக்கத்தொகைகளை தவிர்த்து சீருடைகள், அடையாள அட்டை, மிதிவண்டி, கைபேசி, சியூஜி சிம்கார்டு, ஆஷா டைரி, மருந்துப் பெட்டிகள், ஓய்வு அறை போன்ற ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆஷா ஊழியர்களாக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ரொக்கப்பரிசாக ரூ.20,000 -மும், பாராட்டு சான்றிதழும் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ் எழுத்துமூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.
***
TS/PKV/AG/DL
(Release ID: 2079114)
Visitor Counter : 7