தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
டாக்சிக் என்னும் லித்துவேனியன் திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்க மயில் விருதை வென்றது
கோவாவில் முடிவடைந்துள்ள 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா 2024-ல் சிறந்த திரைப்படத்திற்கான விருது டாக்சிக் என்ற லித்துவேனிய திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கான ரூ.40 லட்சம் ரொக்கப்பணம், சான்றிதழ் மற்றும் தங்கமயில் கோப்பையை டாக்சிக் திரைப்படத்தின் இயக்குநர் சையூல் ப்லியூவைத்தே, தயாரிப்பாளர் ஜியட்ரே புரோகைத்தேவுடன் பகிர்ந்து கொண்டார்.
‘நியூ இயர் தட் நெவர் கேம்’ என்னும் திரைப்படத்தை இயக்கிய ருமேனிய இயக்குநர் பொக்தான் முரேசானு சிறந்த இயக்குநருக்கான வெள்ளிமயில் விருதை பெற்றுள்ளார். ரூ.15 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் வெள்ளிமயில் கோப்பையை அவர் பெற்றுள்ளார்.
சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருதை ஹோலி கவ் படத்தில் நடித்த கிளெமண்ட் பேவேயு பெற்றுள்ளார்.
சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருதை வெஸ்டா மாடுலிட்டே, லிவா ருபெய்கைடே ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருதில் ரூ.10 லட்சம் ரொக்கம், வெள்ளி மயில் கோப்பை மற்றும் ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டது.
***
(Release ID: 2078788)
TS/PKV/AG/KR
(Release ID: 2079062)