மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
டிஜிட்டல் இந்தியா மாநில ஆலோசனைப் பயிலரங்கு உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் ஏற்பாடு செய்யப்பட்டது; டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கிய முயற்சிகளை தேசிய இ-ஆளுகைப் பிரிவு முன்னிலைப்படுத்தியது
Posted On:
29 NOV 2024 10:32AM by PIB Chennai
உத்தரப் பிரதேச அரசு, உத்தரப் பிரதேச டெவலப்மென்ட் சிஸ்டம்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின் ஆளுகைப் பிரிவு லக்னோவில் 2024, நவம்பர் 25 அன்று டிஜிட்டல் இந்தியா மாநில ஆலோசனைப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
உத்தரப் பிரதேச அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுத் துறை முதன்மைச் செயலாளர் திரு அனில் குமார் சாகர், சிறப்புச் செயலாளர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி நேஹா ஜெயின் ஆகியோர் இந்தப் பயிலரங்கைத் தொடங்கி வைத்தனர்.
திரு அனில் குமார் சாகர் தனது தலைமை உரையில், தரவுகள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சிறப்புச் செயலாளர் திருமதி நேஹா ஜெயின் தனது உரையில் மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மட்டுமின்றி, இ-மாவட்ட மேலாளர்களும் கலந்துகொண்டு, நல்லாட்சிக்காக பாடுபடுவது தனித்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய மின் ஆளுகைப் பிரிவால் தொடங்கப்பட்ட டிஜிலாக்கர், ஏபிஐ சேது, மைஸ்கீம், உமாங் போன்ற பல்வேறு தேசிய முயற்சிகள் குறித்து இந்தப் பயிலரங்கு கவனம் செலுத்தியது. சைபர் பாதுகாப்பு, திறன் மேம்பாடு போன்ற முக்கியமான விஷயங்களும் விவாதிக்கப்பட்டன. சிஎம் ஹெல்ப்லைன் (1076) & ஐஜிஆர்எஸ், யுஐடிஏஐ சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் ஆதார் அங்கீகார சேவைகள் பற்றிய விவாதங்களும் இடம் பெற்றன .
முக்கிய உரைகளுக்குப் பின், மாநிலத்தில் மின்-ஆளுமைத் திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சிக்கல்கள் குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் உத்தரப் பிரதேச அரசு அதிகாரிகளுக்கு இடையே வெளிப்படையான விவாதம் நடைபெற்றது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் உள்ள முக்கிய திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாநில தகவல் தொழில்நுட்ப திட்டங்களுக்கு டிஜிட்டல் பயன்பாட்டிற்கான வாய்ப்புகளை கண்டறியவும், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய இ-ஆளுகைப் பிரிவு ஏற்பாடு செய்து வரும் ஆலோசனைப் பயிலரங்குகளின் ஒரு பகுதியாக இந்தப் பயிலரங்கு நடத்தப்பட்டது.
***
(Release ID: 2078835)
TS/SMB/RR/KR
(Release ID: 2078918)