ஆயுஷ்
azadi ka amrit mahotsav

கலந்துரையாடல் அரங்கு, புதுமையான கண்காட்சிகள் @ஐஐடிஎஃப்2024-ல் ஆயுஷ் அமைச்சகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வென்று தந்தன

Posted On: 28 NOV 2024 4:04PM by PIB Chennai

43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஆயுஷ் அரங்கு ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான அதன் புதுமையான அணுகுமுறைக்காக பரவலான பாராட்டைப் பெற்றது. கலந்துரையாடல் புதுமை கண்காட்சிகள்பாம்பு-ஏணி விளையாட்டு போன்ற வேடிக்கையான கற்றல் நடவடிக்கைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி ஆகியவை பார்வையாளர்களைக் கவர்ந்தன.

அதே நேரத்தில், அரங்கில் நேரடி யோகா செயல்விளக்கங்கள் முழுமையான சுகாதார நடைமுறைகளின் சக்தியை வெளிப்படுத்தின. இந்த முயற்சிகள் பொதுமக்களின் மனங்களை வென்றது மட்டுமல்லாமல், ஐஐடிஎஃப் 2024-ல் ஆயுஷ் அமைச்சகத்திற்கு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுத் தந்தன.

ஆரோக்கியமான இந்தியா, ஆயுஷ் மூலம் வளர்ந்த இந்தியா என்ற தலைப்பிலான இந்த அரங்கம், இந்தியாவின் பாரம்பரிய சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய அமைப்புகள் மற்றும் அமைச்சகத்தின் சமீபத்திய முன்முயற்சிகளின் சிறப்பான காட்சியாக இருந்தது. 'ஆயுஷ் விசா' மற்றும் 'ஆயுஷ் உணவு முறை' போன்ற உரையாடல் காட்சிகள் மற்றும் புதுமையான திட்டங்கள் பார்வையாளர்கள் மற்றும் சர்வதேச தொடர்புடையவர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்நிகழ்ச்சியைப் பார்வையிட்ட மத்திய ஆயுஷ் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ், பாரம்பரிய அறிவை நவீன கண்டுபிடிப்புகளுடன் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக ஆயுஷ் குழுவினரை பாராட்டிய அமைச்சர், கண்காட்சியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார், முழுமையான ஆரோக்கியம் குறித்த உலகளாவிய உரையாடலுக்கு பங்களிப்பதில் இந்த முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078446

-----

TS/IR/KPG/DL


(Release ID: 2078744) Visitor Counter : 6


Read this release in: English , Urdu , Hindi