தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
"கலை திரைப்படங்கள் கடினமானவை மற்றும் சிக்கலானவை":, 'லாஸ்ட் ஹார்ஸ்' இயக்குநர் கியுஹ்வான் ஜியோன்
தென் கொரியா, ஹங்கேரி மற்றும் பனாமாவைச் சேர்ந்த மூன்று வசீகரிக்கும் திரைப்படங்கள் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐ.எஃப்.எஃப்.ஐ) சினிமா ஆர்வலர்களை மகிழ்வித்துள்ளன. சினிமா ஆஃப் தி வேர்ல்ட் பிரிவில் இடம்பெற்றவை கியுவான் ஜியோனின் தென் கொரிய திரைப்படமான லாஸ்ட் ஹார்ஸ் மற்றும் ரோட்ரிகோ குயின்டெரோ அரூஸின் ஸ்பானிஷ் மொழி பனாமா திரைப்படமான தே கால் மீ பான்சர் ஆகியவை ஆகும். பாலிண்ட் சிம்லர் இயக்கிய ஹங்கேரிய திரைப்படமான Lesson Learned, ICFT-UNESCO காந்தி பதக்கத்திற்கும் போட்டியிடுகிறது. இந்த படங்களின் இயக்குனர்கள் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
க்யு-ஹ்வான் ஜியோனின் தொலைந்து போன குதிரை திரைப்படம் கிம் என்ற ஒரு வயதான மனிதரின் போராட்டங்களை சித்தரிக்கிறது, அவரது 20 நேசத்துக்குரிய குதிரைகள் ஜெஜு தீவில் உள்ள அவரது மேய்ச்சல் நிலத்திலிருந்து மர்மமான முறையில் மாயமாகிவிடுகின்றன. சட்டவிரோத குடியேறிகள், இறைச்சி விற்பதற்காக காட்டில் திருடப்பட்ட கால்நடைகளை வெட்டுகிறார்கள் என்பதை அறிந்த கிம், அப்பகுதியை சோதனையிட ஒரு அதிரடி படையை உருவாக்குகிறார்.
தனது படத்தைப் பற்றி விவாதித்த ஜியோன், ஒரு சுயாதீன திரைப்படத்தை உருவாக்குவதில் உள்ள சவால்களை வெளிப்படுத்தினார். கே-நாடகங்களின் உலகளாவிய புகழ் இருந்தபோதிலும் இதுபோன்ற படங்கள் அங்கீகாரம் பெறுவதில் உள்ள சிரமங்களைக் குறிப்பிட்டார். கலைப் படங்களின் சிக்கலான தன்மையை வலியுறுத்திய அவர், ஆனால் அவற்றின் தயாரிப்புக்கு ஓடிடி தளங்களை பாராட்டினார். "ஆதரவான தயாரிப்பாளர்களும், ஐ.எஃப்.எஃப்.ஐ போன்ற விழாக்களில் எனது படங்களை காண்பிக்க வாய்ப்பும் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்," என்று அவர் கூறினார்.
***
TS/MM/AG/DL
(Release ID: 2078728)
Visitor Counter : 6