குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மக்களின் நம்பிக்கைகள், விருப்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலமைப்பு கடமையிலிருந்து விலகி, நாடாளுமன்றம் பொருத்தமற்றதாக மாறும் அபாயம் உள்ளது: மாநிலங்களவைத் தலைவர்

Posted On: 28 NOV 2024 3:20PM by PIB Chennai

மாநிலங்களவையில் இன்று ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், உறுப்பினர்கள் ஒழுக்கம் மற்றும் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வலியுறுத்தினார். நாடாளுமன்ற நடைமுறை விதிகளை பின்பற்றுமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, நேற்று ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறித்தது. அதாவது நமது அரசியலமைப்பு 100 ஆண்டை எட்டுவதற்கு முந்தைய இறுதி கால் நூற்றாண்டின் தொடக்கமாக நேற்று இருந்தது.

தேசியவாத உணர்வால் வழிநடத்தப்படும் நமது மூத்தோர் இல்லம், 1.4 பில்லியன் மக்களுக்கு நம்பிக்கையின் சக்திவாய்ந்த செய்தியை அனுப்பி, அவர்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களுக்கான நமது உறுதிப்பாட்டையும், இந்தியா@2047-ஐ நோக்கிய நமது பயணத்தையும் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய தருணம் இதுவாகும். இந்த வரலாற்று வாய்ப்பை நாம் தவறவிட்டோம் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது மக்களின் கூட்டு விருப்பங்களை எதிரொலிக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள், ஆக்கப்பூர்வமான ஈடுபாடு ஆகியவை இருந்திருக்க வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, இந்த அவை வெறும் விவாத அரங்கம் மட்டுமல்ல - நமது தேசிய உணர்வு இங்கிருந்தே எதிரொலிக்க வேண்டும். 

நாடாளுமன்ற இடையூறு ஒரு தீர்வல்ல, அது ஒரு நோய். இது நமது அடித்தளத்தை பலவீனப்படுத்துகிறது. இது நாடாளுமன்றத்தை பொருத்தமற்றதாக மாற்றுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078414

---

TS/IR/KPG/DL


(Release ID: 2078670) Visitor Counter : 7


Read this release in: English , Urdu , Hindi