சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி:- இந்திய தாவரவியல் பூங்கா பாதுகாப்பு
Posted On:
28 NOV 2024 2:01PM by PIB Chennai
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள துணை அமைப்பான இந்திய தாவரவியல் ஆய்வு மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, ஹவுராவில் உள்ள ஏ.ஜே.சி போஸ் இந்திய தாவரவியல் பூங்கா தாவரங்களைப் பாதுகாப்பதற்கான மையமாக செயல்படுகிறது. இது 3000-க்கும் அதிகமான பூக்கும் மற்றும் பூக்காத தாவர குடும்பங்களைச் சேர்ந்த 20,000-க்கும் அதிகமான தாவரங்களைக் கொண்டுள்ளது. இவற்றில், 300-க்கும் அதிகமான இனங்கள் இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச சங்கத்தின் சிவப்பு பட்டியலில் உள்ளன. இதில் நாட்டின் பல்வேறு தாவர புவியியல் பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் இனங்களும் அடங்கும். ஹவுராவில் உள்ள தாவரவியல் பூங்கா அதன் வழக்கமான நடவடிக்கைகளில், இந்த தாவரங்களை பெருக்குகிறது. தேவைப்படும் போது நடவு செய்வதை அறிமுகப்படுத்துகிறது. இத்தகைய மரக்கன்றுகள் பல்வேறு தாவரவியல் பூங்காக்கள் மற்றும் வனத்துறையினருக்கு தொடர்ந்து விநியோகிக்கப்படுகின்றன.
900-க்கும் அதிகமான நீர்வாழ் தாவரங்கள் பிரிவு, 100-க்கும் அதிகமான வகைப்பாடுகள் மற்றும் கலப்பின சேகரிப்புகளைக் கொண்ட செம்பருத்தி பிரிவு, 100-க்கும் அதிகமான காட்டு வாழை மற்றும் உண்ணக்கூடிய பழங்கள் பிரிவு , 400-க்கும் அதிகமான மருத்துவ தாவரங்களைக் கொண்ட மூலிகை மருத்துவப் பிரிவு, 42 வகையான மூங்கில் பிரிவு, 50-க்கும் அதிகமான இனங்களைக் கொண்ட பனை பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளை ஏ.ஜே.சி போஸ் இந்திய தாவரவியல் பூங்கா உருவாக்கியுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078358
***
TS/SMB/RR/KR
(Release ID: 2078533)
Visitor Counter : 8