சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி: சுரங்க கண்காணிப்பு அமைப்பு
Posted On:
28 NOV 2024 2:02PM by PIB Chennai
சுரங்க கண்காணிப்பு அமைப்பு 2016-ல் தொடங்கப்பட்டதிலிருந்து செயல்பட்டு வருகிறது. இது செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பாகும். இது முக்கிய கனிமங்களுக்கான சட்டவிரோத சுரங்க நிகழ்வுகளைத் தடுக்க மாநில அரசுகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சரிபார்ப்பு நோக்கத்திற்காக மாநில அரசுகள் வழங்கப்பட்ட பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு பயன்பாட்டை அணுகலாம். சுரங்கக் குத்தகைப் பகுதியின் எல்லைக்கு வெளியே 500 மீட்டர் வரையிலான மண்டலத்தில் செயற்கைக்கோள் படங்களில் காணப்பட்ட வழக்கத்திற்கு மாறான நில பயன்பாட்டு மாற்றம் படம்பிடிக்கப்பட்டு, சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டப்படுவதைத் தடுக்க மாநில அரசுகளுக்கு தூண்டுகோலாக செயல்படுகிறது.
மத்திய அரசின் சுரங்க அமைச்சகம் வழங்கிய தகவலின்படி, 2016-17-ம் ஆண்டு முதல், 950 சுரங்க எதிர்வினை தூண்டல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 574 சுரங்க எதிர்வினை தூண்டல்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. இதில் 80 அங்கீகரிக்கப்படாத சுரங்க நடவடிக்கைகள் மேற்கண்ட சுரங்க எதிர்வினை தூண்டல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
கனிம வளம் நிறைந்த பல்வேறு மாநிலங்களில் சிறு கனிமங்களுக்கான சுரங்க கண்காணிப்பு முறையை மேற்கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 179 அதிகாரிகள் பயிற்சியில் பங்கேற்றனர். எளிதான கைபேசி குறுஞ்செய்தி சேவைக்கான கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு. கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078361
-----
TS/IR/KPG/KR
(Release ID: 2078493)
Visitor Counter : 8