மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
ஒடிசாவில் கடல் மீன்வள மேம்பாடு
Posted On:
28 NOV 2024 2:04PM by PIB Chennai
மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகமானது ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை ஒடிசாவின் 480 கி.மீ. தூர கடலோரப் பகுதி உள்ளிட்ட கிழக்கு கடலோரப் பகுதிகளில் மீன்வள ஆதாரங்களைப் பாதுகாப்பதற்காகவும், கடல் மீன்வளத்தை பராமரிப்பதற்காகவும் ஒரே சீரான மீன்பிடித் தடையை அமல்படுத்தி வருகிறது. மேலும், ஒடிசா அரசு ஆண்டுதோறும் நவம்பர் 1 முதல் மே 31 வரை ஆலிவ் ரிட்லி ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு ஒடிசா கடற்கரையின் 120 கி.மீ தொலைவிற்கு (காஹிர்மாதா கடல் வனவிலங்கு சரணாலயம், தேவி ஆற்று முகத்துவாரம், ருஷிகுல்யா நதி முகத்துவாரம் மற்றும் தமரா நதி முகத்துவாரம்) மீன்பிடிப்பதை தடை செய்து வருகிறது. அதிகப்படியான மீன்பிடிப்பைக் குறைப்பதற்காக கடந்த 20 ஆண்டுகளாக விசைப்படகு மீன்பிடி கப்பல்களின் அளவு அதிகரிக்கப்படவில்லை என்றும் ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
பிரதமரின் மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒடிசா அரசு மற்றும் இதர முகமைகளுக்கு கடல் மீன்வளம் உள்ளிட்ட மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாட்டிற்காக ரூ.1265.42 கோடி திட்ட மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி மற்றும் மீன்வள அமைச்சகம் மற்றும் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.564.00 கோடியாகும்.
மாநிலங்களவையில் இன்று மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்த பதிலை அளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078365
---
TS/IR/KPG/KR
(Release ID: 2078476)
Visitor Counter : 5