சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி:- உலகளாவிய இயற்கை பாதுகாப்புக் குறியீட்டெண்
Posted On:
28 NOV 2024 2:01PM by PIB Chennai
உலகளாவிய இயற்கை பாதுகாப்புக் குறியீட்டெண்- 2024 முதல் முறையாக, நிலைத்தன்மை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான கோல்ட்மேன் சோனென்ஃபெல்ட் பள்ளி, இஸ்ரேலின் நெகேவில் உள்ள பென்-குரியன் பல்கலைக்கழகம், பயோடிபி.காம் ஆகியவற்றால் அண்மையில் வெளியிடப்பட்டது. நில மேலாண்மை, பல்லுயிர் பெருக்கத்திற்கான அச்சுறுத்தல்கள், திறன் மற்றும் ஆளுமை, பருவநிலை மாற்ற தணிப்பு ஆகியவற்றில் இந்தியாவின் நன்கு அங்கீகரிக்கப்பட்ட முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மொத்தம் 180 நாடுகளில் இந்தியா 176 வது இடத்தைப் பெற்றுள்ளது. இயற்கை பாதுகாப்புக் குறியீடு, நாட்டின் அறிக்கையிடப்பட்ட தரவை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை, நம்பத்தகாத இயற்கை பாதுகாப்புக் குறியீட்டிற்கு வழிவகுக்கும் பல ஆதாரங்களை நம்பியுள்ளது. சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகளான சர்வதேச புலிகள் கூட்டணி, சுற்றுச் சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறை இயக்கம் , சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, பேரழிவு பின்னடைவு உள்கட்டமைப்புக்கான கூட்டணி போன்ற சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகளில் இந்தியாவின் தலைமைப் பாத்திரத்தை இயற்கை பாதுகாப்புக் குறியீடு, முற்றிலுமாக புறக்கணித்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா நில மேலாண்மை மற்றும் அதன் பல்லுயிர் பெருக்கத்திற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, உயிரியல் பன்முகத்தன்மை (திருத்தம்) சட்டம், 2023 இயற்றப்பட்டுள்ளது. உயிரியல் வளங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவைப் பாதுகாப்பதற்கும், நிலையான முறையில் பயன்படுத்துவதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் புதிய விதிகளுடன் சேர்த்து உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், 2002 ஐ திருத்தியுள்ளது. பல்லுயிர் மேலாண்மை குழுக்களை அமைத்தல், பல்லுயிர் பாரம்பரிய தளங்களுக்கான அறிவிப்பு மற்றும் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களுக்கான அறிவிப்பு உள்ளிட்ட பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை திருத்தச் சட்டம் உள்ளடக்கியது. அறிவிக்கப்பட்ட உயிரினங்களுக்கான அணுகலை ஒழுங்குபடுத்துவதற்கும், அந்த இனங்களை மறுவாழ்வு செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்க மாநில பல்லுயிர் வாரியங்களுக்கு (SBBs) இந்த அறிவிக்கை அதிகாரம் அளிக்கிறது.
2024 செப்டம்பர் 10 அன்று தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டங்களின் கீழ் இந்தியா தனது தேசிய இலக்குகளை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது. கொலம்பியாவின் காலியில் சமீபத்தில் முடிவடைந்த சிஓபி மாநாட்டின்போது பல்லுயிர் போர்ட்டலில் 2024 அக்டோபர் 31 அன்று தனது தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டத்தையும் சமர்ப்பித்துள்ளது. தேசிய பல்லுயிர் இலக்குகள், செயல் திட்டங்கள் ஆகிய இரண்டும் குன்மிங் மாண்ட்ரீல் உலகளாவிய பன்முகத்தன்மை கட்டமைப்பின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுடன் முழுமையாக ஒத்துப்போகின்றன.
இந்தியாவின் தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டம் என்பது கடல் பகுதிகளைப் பாதுகாத்தல், சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல் , மாசுக் கட்டுப்பாடு, உயிரினங்கள் மேலாண்மை மூலம் பல்லுயிர் அச்சுறுத்தல்களைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078360
***
TS/SMB/RR/KR
(Release ID: 2078423)
Visitor Counter : 16