சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி:- தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவின் நிலை

இடுகை இடப்பட்ட நாள்: 28 NOV 2024 2:02PM by PIB Chennai

தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்கா,  மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பூங்காவாகும். தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் அடைப்பிடங்கள் மற்றும் வசதிகள், மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தால் உயிரியல் பூங்கா அங்கீகார விதிகள், 2009ல் வகுக்கப்பட்டுள்ள தரம் மற்றும் விதிமுறைகளின்படி மதிப்பீடு செய்யப்படுகின்றன.

பார்வையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், விலங்குகளின் வாழ்விடங்களை மேம்படுத்தவும் தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பார்வையாளர்களுக்கு இணையதளம் மூலம் பயணச்சீட்டு வழங்குதல், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தகவல் பலகைகளை நிறுவுதல், நாட்டு மரக்கன்றுகள் மற்றும் புதர்ச்செடிகளை நடுதல், கால்நடைகளுக்கு சிறந்த சூழலை உருவாக்குதல், பார்வையாளர்களுக்கு மின்கலத்தால் இயங்கும் வாகன சேவைகளை வழங்குதல், கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கால்நடைக் கூண்டுகளை கண்காணிப்பது ஆகியவை இதில் அடங்கும்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2078362

***

TS/SMB/RR/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2078422) வருகையாளர் எண்ணிக்கை : 73
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी