தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அஞ்சல் துறை வழங்கும் சேவைகள்

Posted On: 27 NOV 2024 3:31PM by PIB Chennai

அஞ்சல் துறை  பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.  தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை, ஆதார் பதிவு / புதுப்பித்தல் வசதி, ரயில்வே பயணிகள் முன்பதிவு வசதி, பொது சேவை மையம், தங்க பத்திரங்கள் விற்பனை, பல்வேறு பயன்பாட்டு கட்டணங்களைச் செலுத்துதல், பிற நிர்வாகங்களுக்கு பணம் செலுத்துதல் போன்ற சேவைகள் இதில் அடங்கும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் சேவை வாரியாக, ஈட்டப்பட்ட வருவாய் விவரங்கள் பின்வருமாறு:

சேவைகள்

2021-22

2022-23

2023-24

அஞ்சல், பார்சல் சேவைகள்

3656.42

4146.39

4640.99

தபால் அலுவலக சேமிப்பு திட்டம் (முகவர் கட்டணங்கள்)

6114.47

6186.71

6427.08

பண ஆணை, இந்திய அஞ்சல் ஆணை

118.02

84.41

73.13

ஆயுள் காப்பீடு, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு, உள்ளீட்டு வரி வரவு போன்றவை.

1202.63

1139.24

1255.88

பிற சேவைகள்

971.89

500.38

180.15

மொத்தம்

12063.43

12057.13

12577.23

(தொகை கோடியில்)

01.07.2024 நிலவரப்படி, அஞ்சல் துறையில் மொத்தம் 1,77,479 போஸ்ட்மாஸ்டர்கள், தபால்காரர்கள், பிற ஊழியர்கள் உள்ளனர். 01.07.2024 நிலவரப்படி 2,67,152 கிராம அஞ்சல் ஊழியர்கள் உள்ளனர்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

****

TS/PLM/KPG/KR/DL


(Release ID: 2078168) Visitor Counter : 6


Read this release in: English , Urdu , Hindi