சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த புதிய சர்வதேச சட்டபூர்வ கட்டுப்பாட்டிற்கான நிதியத்தை ஏற்படுத்த இந்தியா பரிந்துரை
Posted On:
27 NOV 2024 6:40PM by PIB Chennai
பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்கொள்வதற்கான உலகளாவிய நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக வளரும் நாடுகளுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குவது அவசியமாகும். மாண்ட்ரீல் ஓப்பந்தத்தை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட பன்னாட்டு நிதியத்தின் பிரத்யேக பன்னாட்டு நிதிய மாதிரியை உருவாக்குவதற்கான பரிந்துரையை இந்தியா முன்மொழிந்துள்ளது. கொரியாவில் பூசன் நகரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் இந்தப் பரிந்துரையை முன்வைத்தனர்.
வளரும் நாடுகளில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அதிகரித்து வரும் செலவுகளை வளர்ந்த நாடுகள் ஏற்க வேண்டும் என்று இந்தப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பன்னாட்டு நிதியத்தின் இலக்குகளை அடையும் நோக்கில் செயல்பாட்டுக் கொள்கைகள், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை உருவாக்க, வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் சமமான பிரதிநிதித்துவத்துடன் ஒரு துணை அமைப்பை நிறுவுவதற்கும் இந்தப் பரிந்துரை வகை செய்கிறது
-----
SV/KPG/DL
(Release ID: 2078159)
Visitor Counter : 6