கூட்டுறவு அமைச்சகம்
கூட்டுறவுத் துறையில் மத்திய திட்டங்களை செயல்படுத்துதலும் கண்காணித்தலும்
Posted On:
27 NOV 2024 4:46PM by PIB Chennai
கூட்டுறவுத் துறையில் மத்திய திட்டங்களை செயல்படுத்துதலில் வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புடைமையையும் உறுதி செய்வதற்கான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
அவற்றில் முக்கியமான சில:
- அனைத்து நிதி வெளியீடுகள், பயன்பாட்டு கண்காணிப்பு ஆகியவை பொது நிதி மேலாண்மை அமைப்பு மூலம் கட்டாயமாக மேற்கொள்ளப்படுகின்றன. இது நிகழ்நேர செலவின கண்காணிப்பையும் வெளிப்படையான நிதி மேலாண்மையையும் உறுதி செய்கிறது.
- மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் செயலாளர்/இணை செயலாளர் நிலையில் காணொலி மூலம் மாதாந்திர அடிப்படையிலான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
- செலவினத் துறையின் வழிகாட்டுதல்களின்படி, அனைத்து செயல்படுத்தும் முகமைகளும் பொது நிதி மேலாண்மை அமைப்பில் பதிவு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் வங்கிக் கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. இது நேரடி நிதி பரிமாற்றம், நிகழ்நேர செலவின கண்காணிப்பை எளிதாக்குகிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 2078125)
Visitor Counter : 5