பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுதப்படைகள், தொழில்துறை இடையேயான ஒத்துழைப்பிற்கான பாதுகாப்பு கூட்டு தினங்கள் புதுதில்லியில் ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2024 3:36PM by PIB Chennai

ஆயுதப்படைகள், தொழில்துறைக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு, 2024 நவம்பர் 28 - 29 தேதிகளில் புதுதில்லியில் கூட்டு போர் பயிற்சி மையம் மற்றும் இந்திய ராணுவ ஆய்வு அமைப்பு ஆகியவை இணைந்து பாதுகாப்பு கூட்டு ஒத்திகை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்வு அரசு மற்றும் வர்த்தக பங்குதாரர்களை இணைக்கவும், அதன் உத்திசார் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறை செயலாளர் திரு. சஞ்சீவ் குமார் ஆகியோருடன் இணைந்து இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.

200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படை அமைச்சகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொழில்நுட்பம் மற்றும் கொள்முதல் சார்ந்த நடவடிக்கைகளை கையாள்வார்கள். கூடுதலாக, நாட்டின் பாதுகாப்பு திறன்களை வளர்ப்பதற்கு தொழில்துறையின் பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையில் 75 நிறுவனங்களின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

***

TS/SV/RR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2078123) வருகையாளர் எண்ணிக்கை : 71
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी