உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாபில் உள்ள போதைப் பொருள் தடுப்பு அலுவலகங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2024 4:47PM by PIB Chennai

பஞ்சாபில் போதைப்பொருள் பிரச்சனையை எதிர்த்துப் போராட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

முக்கியமான, குறிப்பிடத்தக்க, போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் புலனாய்வை கண்காணிக்கவும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைமை இயக்குநர் தலைமையில் கூட்டு ஒருங்கிணைப்புக் குழு (JCC) மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருட்களின் சட்டவிரோத கடத்தலை தடுப்பதற்கான ஆலோசனைக் குழு (PITNDPS) பஞ்சாப் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது,

டார்க்நெட், கிரிப்டோ கரன்சி தொடர்பான பணிக்குழு மல்டி ஏஜென்சி சென்டர் (எம்ஏசி) அமைப்பின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது..

சர்வதேச எல்லையில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட பல்வேறு பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ரயில்வே கட்டமைப்புகளில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பிரத்யேக போதைப்பொருள் தடுப்பு பணிக்குழு  அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சிறப்பு தலைமை இயக்குநர்  மாநிலத்தில் பிரத்யேக போதைப்பொருள் தடுப்பு பணிக்குழு  தலைவராக செயல்படுகிறார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இதனைத் தெரிவித்துள்ளார்.

***

TS/PLM/KPG/KR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2078071) வருகையாளர் எண்ணிக்கை : 83
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Punjabi