தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
செயற்கைக்கோள் தகவல் தொடர்பில் சீர்திருத்தம்
Posted On:
27 NOV 2024 3:30PM by PIB Chennai
செயற்கைக்கோள் தகவல்தொடர்பு சீர்திருத்தங்கள்-2022-ன் ஒரு பகுதியாக, 06.05.2022 அன்று வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த உரிமத்தில் திருத்தம் செய்வதன் மூலம், அது தொடர்புடைய தொலைத்தொடர்பு பொறியியல் மையத்தின் தரநிலை(கள்) மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு ஏற்ப, செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைப்பை வழங்குவதற்காக பயனர் முனைய நிலையங்களை அமைக்க தொலைத்தொடர்புத் துறை அனுமதி அளித்துள்ளது.
செயற்கைக்கோள் தகவல்தொடர்பு சீர்திருத்தங்கள்-2022 தொலைத் தொடர்பு சார்ந்த வர்த்தகத்தை எளிதாக்கி உள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விண்வெளித் துறைக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவைகளை வழங்குவதற்கான அமைப்புகளை உருவாக்குதல்/ அல்லது குத்தகைக்கு விடுதல், அல்லது சொந்தமாக்குதல் மற்றும் அதன் செயலாக்கம் ஆகியவற்றில் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பை அனுமதிக்கின்றன. இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் மக்களுக்கு செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவைகளின் அணுகல் மற்றும் குறைந்த செலவில் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
தொலைத் தொடர்புத் துறையின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சீர்திருத்தங்கள்-2022 அது தொடர்பான ஒழுங்குமுறை நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது. தொலைத் தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான உரிமம் பெற்றவர்கள் மீதான கட்டண சுமைகளைக் குறைத்துள்ளது. விண்வெளித் துறையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவாக, பல்வேறு வகையான செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. நிறுவனங்களுக்கு இடையேயான போட்டிகள் அதிகரிப்பது என்பது தரமான, குறைந்த செலவிலான சேவைகள் மக்களுக்கு கிடைக்க வழிவகுக்கும் என்றும், கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் தொலைத் தொடர்பு சேவைகளை விரிவுபடுத்துவதற்கும் உதவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/SV/RR/KR/DL
(Release ID: 2077995)
Visitor Counter : 18