நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி உற்பத்திக்கு ஆதரவு
Posted On:
27 NOV 2024 1:44PM by PIB Chennai
2024 அக்டோபர் மாதத்தில் அகில இந்திய உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 84.47 மில்லியன் டன் (MT) (தற்காலிகமானது) ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் உற்பத்தி 78.57 மில்லியன் டன்னாக இருந்தது. இது சுமார் 7.5% வளர்ச்சியாகும்.
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க நிலக்கரி நிறுவனங்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளன:
நடப்பு நிதியாண்டில் அகில இந்திய நிலக்கரி உற்பத்தி இலக்கு 1080 மில்லியன் டன்.
ரயில் மூலம் நிலக்கரியை எடுத்துச் செல்லும் போது, போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகள், தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் முனையங்களில் நெரிசல் போன்ற சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ரயில் மூலம் நிலக்கரியை வெளிக்கொணர்வதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள, நிலக்கரி அமைச்சகம் 8 ரயில்வே திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அவற்றில் 5 செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 3 கட்டுமானத்தில் உள்ளன. மேலும், நிலக்கரியை வெட்டி எடுப்பது தொடர்பான சவால்களை எதிர்கொள்ள 38 முக்கியமான ரயில்வே திட்டங்களை நிலக்கரி அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.
மேலும், ரயில்வே அமைச்சகம் தெரிவித்தபடி, நாட்டில் அதிகரித்து வரும் நிலக்கரி போக்குவரத்தின் தேவையை பூர்த்தி செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் மொத்த பட்ஜெட் ஆதரவு ரூ.1.6 லட்சம் கோடியாக (BE) இருந்தது. இது இந்திய மின் துறையில் நிலக்கரியின் வளர்ந்து வரும் தேவையை ஆதரிப்பதற்காக திறன் விரிவாக்கம் மற்றும் சொத்து நவீனமயமாக்கலுக்காக 2024-25 நிதியாண்டில் ரூ.2.65 லட்சம் கோடியாக (BE) அதிகரித்துள்ளது. நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கு வசதியாக ரயில்வேயால் வழக்கமான அடிப்படையில் வேகன்கள் சேர்க்கப்படுகின்றன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077848
****
TS/MM/RS/KR
(Release ID: 2077878)
Visitor Counter : 11