அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பழங்குடியினர் கௌரவ தினம் மற்றும் பழங்குடியினர் கௌரவ ஆண்டு விழா கொண்டாட்டங்கள்
Posted On:
27 NOV 2024 10:57AM by PIB Chennai
பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த ஆண்டு தினத்தை குறிக்கும் வகையில், 2024-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பழங்குடியின கௌரவ தினம் மற்றும் பழங்குடியின கௌரவ ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் குழுமத்தின்கீழ் செயல்படும் தேசிய அறிவியல் தொடர்பியல் மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
முன்னர் வங்களா மாகாணம் ராஞ்சி மாவட்டமாக இருந்து தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள உலிகத்து கிராமத்தில் 1775-ம் ஆண்டு பிறந்த பிர்சா முண்டா பழங்குடியின மக்களின் தலைவராகவும், சுதந்திரப் போராட்ட வீரராகவும் இருந்தார். ஆங்கிலேயே ஆதிக்கத்திற்கு எதிராகவும் பழங்குடியின குழுக்களின் விடுதலைக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் பழங்குடியின மக்களின் பங்களிப்பை போற்றும் வகையில் பழங்குடியின கௌரவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ள அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய அறிவியல் தொடர்பியல் மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் யோகேஷ் சுமன், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பிர்சா முண்டா தலைமையிலான பழங்குடியின மக்களின் பங்களிப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தார். நாடு முழுவதும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் அரசின் பங்களிப்பு குறித்தும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
தேசிய அறிவியல் தொடர்பியல் மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சுமன் ராய், அரோமா இயக்கத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து விவரித்தார்.
***
(Release ID: 2077783)
TS/SV/RR/KR
(Release ID: 2077823)
Visitor Counter : 9